
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

பரம்சீவன் மேலாம் பரமம் பரத்தின்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாஇடர் வீட்டும் சுழுனை
உரந்தகும் ஆனந்திஆம் உண்மை தானே.
English Meaning:
Further Beyond Para Siva State is Paramam (Brahmam),Paramparam and Para Maha Sivam
Beyond Para Siva is Paramam (Brahmam);
Beyond Paramam is Paramparam (Para Brahmam);
Thus are states ascending;
From Para Siva Jagrat, to Para Siva Svapna, and to Para
Siva Sushupti
The Jiva that has Para Siva become reaches
The-Final Truth that is Para Nandi.
Tamil Meaning:
`பரம்` என்பது `மேல்` என்னும் பொருளது ஆதலின், `எங்கும் பரன் என்று சொல்லப்படுகின்ற சிவன், மேலானவன்` - என்பது போதரும். இனி, `பரமம்` என்பது பரத்தினும் உயர்ந்த மேன்மையைக் குறிக்கும். ஆகவே, `பரம்பரன்` என்று சொல்லப்படுகின்ற சிவனே மேலான சிவன். அவனைத் தலைப்படும சீவன் முத்திநிலையே பரசாக்கிரம். (அதில் பிராரத்தம் உயிரைத் தாக்காவிடினும் உடலூழாய் வந்து போகும்.) `பர சொப்பனம்` எனப் படுகின்ற அதிகார முத்தியில் பிராரத்துவத் தொடர்பு உண்டாகாது. பர சுழுத்தியாகிய போக முத்தியிலும், பர துரியமாகிய இலய முத்தியிலும் ஞானம் முற்றி நிற்கும். பரதுரியாதீதமாகிய பரமுத்தியில் சிவானந்தப் பெருக்கு உளதாம். இவையே உண்மைச் சுத்தாவத்தைகளாம்.Special Remark:
`பரமம் பரத்தின் மேலாம்` என இயைக்க. `பரன்` என்பதை `சொரூப சிவன்` என்றும், `சிவன்` என்பதை தடத்த சிவன் என்றும் நாயனார் கொள்கின்றார். `பர நனவாக` என்பதோடும் `இடர்` என்பதைக் கூட்டி. `பரநனவில் (இடர்) ஆக விரிந்த கனா இடர் வீட்டும்` என முடிக்க. விரிந்த கனா பர சொப்பனம். எனவே, `சுழுனை` என்றதும் பர சுழுத்தியே ஆயிற்று உயிர் ஆனந்தியாதல் பரா தீதத்தில் ஆதலின், அதற்கு முன்னேயுள்ள துரியமும், `உரந்தகும்` என்றதிலே அடங்கிற்று. அனைத்தையும் `உண்மை` என ஒன்றாய் அடக்கினமையின், `தானே` என ஒருமை அசையே கூறினார்.இதனால், பராவத்தைகளே உண்மைச் சுத்தாவத்தைகள் ஆமாறு காரண வகையாலும், பயன் வகையாலும் வலியுறுத்தப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage