
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
பதிகங்கள்

உரிய நனாத்துரி யத்தின் இவன்ஆம்
அரிய துரிய நனாவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரன்ஆம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே.
English Meaning:
Beyond Turiya is Turiya-Turiya or Para Turiya; and Para-atita Turiya is Further BeyondIn Jagrat-Turiya State
The Jiva realizes Self;
Then beyond are States
Turiya-Jagrat, Turiya Svapna, Turiya Sushupti, and Turiya-Turiya
In that Para Turiya State the Jiva is Para;
In the Turiya States still beyond, (Para-Turiya-atita)
Jiva becomes Siva.
Tamil Meaning:
எளிதில் இயல்பாக நிகழும் சகல சாக்கிர துரியம் போலவே, அரிதில் சாதித்து அடைவதாகிய நின்மல துரியத்திலும் ஆன்மா, ஆன்மாவாய்த்தான் இருக்கும். ஆயினும், வியாபகமாகிய பர துரியத்தில் அது மேல்நிலையை அடையும். அந்தத் துரியம் வேறுபட நிகழ்கின்ற பரதுரியாதீதத்தில் தான் ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும்.Special Remark:
முன் மந்திரத்தில் `விஞ்சையர் வேந்தன்` என ஒப்புமைப் பெயரால் குறிக்கப்பட்ட ஆன்மாவை இங்கு எழுவாயாக வருவிக்க. பின்னர் `அரிய` என வருதலால், முன்னர், `உரிய` என்றது எளிதில் இயல்பாக நிகழ்வதாயிற்று. நனாத் துரியம் - சகல சாக்கிரமாகிய மத்தியா லவத்தையில் நிகழும் துரியம். `துரியத்தின்` என்பதில் உள்ள `இன்` உருபு. ஒப்புப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமை உருபு. ``மூன்றில்`` என்னும் ஏழாவதனை முடிப்பதாகிய `இவன் ஆம்` என்பது அவ்வேற்றுமைக்குப் பின்னர் வாராது, முன்னர் வந்தது. பருமை - வியாபகத்தைக் குறித்தது. எனவே, பராவத்தையில் தான் ஆன்மா உண்மையாக அணுத்தன்மை நீங்கி, விபுத்தன்மையை அடைதல் பெறப்பட்டது. `பரன்` என்பது, பொதுப்பட, `மேல் நிலையன்` எனப் பொருள் தந்தது. அது வியாபக நிலையன் ஆயினமையைக் குறித்ததேயாகும். திரிதல் - வேறுபடுதல். `திரிய வரும் துரியம்` என்றது, துரியம் வேறுபட, அதன்பின் நிகழும் அதீதத்தைக் குறித்தது. `ஆம்` என்றதை இறுதியிலும் கூட்டுக.இதனால், பராவத்தை நின்மலாவத்தையினும் உயர்ந்ததாதல் இனிது விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage