ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
    கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர்
    பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை
    மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.
  • 10. மண்ணினில் ஒன்றும் மலர்நீர் மருங்காரும்
    பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
    மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓரொன்றாய்
    உன்னின் முடிந்த தொருபூ தசயமே.
  • 11. முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
    வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
    கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன் நாள்இல்லை
    கன்னியைக் கன்னியே காதலித் தானே.
  • 12. கண்டகன வைந்தும் கலந்தன தாம்ஐந்தும்
    உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
    பண்டைய னாகிப் பரந்த வச்சாக்கிரத்
    தண்டமுந் தானாய் அமர்ந்துநின் றானே.
  • 13. நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்(து)
    ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
    மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
    கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.
  • 14. தானம் இழந்து தனிபுக் கிதயத்து
    மானம் அழிந்து மதிகெட்டு மால்ஆகி
    ஆன விரிவறி யாஅவ் வியத்தத்தின்
    மேனி அழிந்து சுழுத்திய தாமே.
  • 15. சுழுனையைச் சேர்ந்துள மூன்றுளதன் காட்சி
    கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
    ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
    விழும்அப் பொருளுடன் மேவிநின் றானே.
  • 16. தானத் தெழுந்து தருந்துரி யத்தினின்
    வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
    கானத் தெழுந்த கருத்தின் தலையிலே
    ஊனத்த வித்தைவிட் டூமன்நின் றானே.
  • 17. ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
    ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
    ஓம்மயம் உற்றது உள்ளொளி பெற்றது
    நாம்மயம் அற்றது நாம்அறி யோமே.
  • 18. துரியம் இறுப்பது சாக்கிரத் துள்ள
    நரிகள் பதினாலும் நஞ்சுண்டு செத்தன
    பரிய புரவியும் பாறிப் பறந்தது
    துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.
  • 19. மாறா மலம்ஐந்தான் மன்னும் அவத்தையின்
    வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்(கு)
    ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்திறந்(து)
    ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.
  • 2. முப்பதோ டாறின் முதல்நனா ஐந்தாகும்
    செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண் டொன்றாகி
    அப்பதி யாகும் நியதி முதலாகச்
    செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே.
  • 20. உண்ணுந்தன் னூடாடா(து) ஊட்டிடும் மாயையும்
    அண்ணல் அருள்பெறல் முத்திய தாவது
    நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்(து)
    எண்ணுறு ஞானத்தின் ஏர்முத்தி யெய்துமே.
  • 21. அதிமூட நித்திரை ஆணவம் நந்த
    அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
    இதமான கேவலம் இத்திறம் சென்று
    பரமாக ஐயவத் தைப்படு வானே.
  • 22. ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
    தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
    நேசாய ஈசனும் நீடா ணவத்தரை
    ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.
  • 23. மஞ்சொடு மந்தா கினிகுடம் ஆம்`என
    விஞ்சறி வில்லோன் விளம்பும் மிகுமதி
    எஞ்சலில் ஒன்றேனும் ஆ(று) என இவ்வுடல்
    அஞ்சுணும் மன்னன் அன்றேபோம் அறவே.
  • 24. படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
    வடிவுடை மாநகர் தான்வரும் போது
    அடியுடை ஐவரும் அங்குறை வோரும்
    துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.
  • 25. நேரா மலத்தினை நீடைந் தவத்தையின்
    நேரான வாறுன்னி நீடு நனவினில்
    நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
    நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.
  • 3. இந்தியம் ஈரைந்தீ ரைந்துதன் மாத்திரை
    மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்
    அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
    பந்தவச் சாக்கிரப் பாலது வாகுமே.
  • 4. பாரது பொன்மைப் பசுமை யுடையது
    நீரது வெண்மை செம்மை நெருப்பது
    காரது மாருதம் கறுப்பை யுடையது
    வானகம் தூமம் மறைந்துநின் றார்களே.
  • 5. பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐயைந்தும்
    ஏதம் படச்செய் திருந்த புறநிலை
    ஓது மலம்குண மாகும்ஆ தாரமோ(டு)
    ஆதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.
  • 6. இடவகை சொல்லில் இருபத்தஞ் சானை
    படுபர சேனைகள் பாய்பரி ஐந்தும்
    உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
    அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.
  • 7. உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
    உடம்பிடை நின்ற உயிரை அறியார்
    உடம்போ டுயிரிடை நட்பறி யாதார்
    மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.
  • 8. இருக்கின்ற வாறொன் றறிகிலர் ஏழைகள்
    முருக்கும் அசபையை மாற்றி முகந்து
    கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்
    துருக்கொண்டு தொக்க உடல்அழி யாதே.
  • 9. ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாறை
    அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
    அளிக்குங் கலைகளி னால்அறு பத்துள்
    ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.