
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

மஞ்சொடு மந்தா கினிகுடம் ஆம்`என
விஞ்சறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றேனும் ஆ(று) என இவ்வுடல்
அஞ்சுணும் மன்னன் அன்றேபோம் அறவே.
English Meaning:
Life After Death IsThey who say: ``After death nothing is left;
The Jiva the five states experienced
Forever fled;``
They are verily unenlightened surpassing;
They might as well say:
``The heavenly Ganga Mandakini
That from clouds aloft streams forth
Ends as an empty pot. ``
Tamil Meaning:
`காலம், இடம், கருவி, கரணம் ஆகிய இவற்றுள் எந்த ஒன்றினாலும் உட்படுத்தப்பட்டு, ஏகதேசப்படுதலை ஒரு ஞான்றும் எய்தாத பேரறிவாகிய அந்தப் பரப்பிரமந்தான் இந்த உயிர்` என ஏகான்மவாதி கூறும் அக்கூற்று, `ஒரு குடத்துள் அடங்கியுள்ள நீரைச்சுட்டி, - மேகம் - என்பதும் இதுதான்; - தான் கங்கா நதி - என்பதும் இதுதான் எனக் கூறுகின்ற மிக்க அறிவில்லாதவன் மிக்க அறிவுடையான் போன்று கூறுகின்ற கூற்றோடு ஒப்பதாய்ப் போக, இந்த உடம்பிற்குத் தலைவனாகிய உயிர் இதைவிட்டு நீங்கும் நாள் வருகின்ற வரையில் சாக்கிரம் முதலிய அஞ்சவத்தைகளை இந்த உடம்பின்கண் எய்தி, ஏகதேசப்பட்டுத் துன்பன் உறும்.Special Remark:
`எஞ்சலில் ஒன்றெனும் ஆறு` என்பதை முதலில் வைத்து உரைக்க. எஞ்சல் இல் ஒன்று, பரப்பிரமம். ஆறு - முறைமை. `இவ்வுடற்கண்` என ஏழாவது விரிக்க. குடம், அதன்கண் உள்ள நீரைக்குறித்த ஆகுபெயர். `மஞ்சு, மத்தாகினி` - என்பனவும் அன்ன.அவத்தை இயல்பே கூறுகின்றாராயினும், `இவ்வியல்பானே ஏகான்ம வாதம் பொருந்தாமையும் விளங்கும்` என அதனையும் இனிது விளங்குதற்பொருட்டு இடம் வாய்த்தமையின் கறினார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage