
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

இந்தியம் ஈரைந்தீ ரைந்துதன் மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தவச் சாக்கிரப் பாலது வாகுமே.
English Meaning:
Instruments of ExperienceIndriyas ten
Their Tanmatras ten
The Vayus ten (winds) that secret work,
The Antahkarnas four (inner seats of thought)
And Purusha, the Experient Jiva,
—All these (instruments of experience)
Are again and again entangled
In the cycle of life`s awareness.
Tamil Meaning:
கேவலம் வருமாறு செய்கின்ற அந்தச் சாக்கிரா வத்தையானது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, அவற்றின் விடயங்கள் பத்து, வாயுக்கள் பத்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று - என்னும் முப்பத்தைந்து கருவிகளால் நிகழும்.Special Remark:
ஞானேந்திரிய விடயங்கள் முன்பு தன் மாத்திரை நிலையில் இருந்தமை பற்றி அவற்றை, `தன்மாத்திரை` என்கின்றவர், அவற்றோடொத்த கன்மேந்திரிய விடயங்களையும் ஒருங்கு கூட்டி, `தன்மாத்திரை` எனச் சுருங்கக் கூறினார். வாயுக்களில் பிராணனும், உதானனும் சொல்லொலியாயும் தோன்றுதல் பற்றி ஏனை வாயுக் களையும் `மந்திரமாகும்` என்றார். `பந்தம்` என்றது கேவல நிலையை. `சக்கரப்பாலது` என்பது, யாதும் அறியாதவர் தாம் அறிந்தவாறே திரித்துக்கொண்ட பாடமாகும். பால் - பகுதி அது, பகுதிப் பொருள் விகுதி. `ஆன்மாவும்` என்பதன் ஈற்றில், `ஆகிய முப்பத்தைந்தும்` என்னும் தொகைச் சொல் விரித்து, `முப்பத்தைந்தாலும் சாக்கிரப் பால் ஆகும்` எனமுடிக்க` `சாக்கிரமாவது இங்கு எடுத்துக்கொண்ட கீழாலவத்தைச் சாக்கிரம்` என்பது விளங்குதற்பொருட்டு, `பந்த அச்சாக்கிரம், என்றார்.இதனால், முதற்கண், `மத்திமை யானது சாக்கிரம்` எனக் கூறி யதன்கண் செயற்படும் கருவிகளாவன இவை - என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage