
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

பாரது பொன்மைப் பசுமை யுடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை யுடையது
வானகம் தூமம் மறைந்துநின் றார்களே.
English Meaning:
The Five Elements Also Are Within BodyEarth is of colour gold pure;
Water is white;
Fire red;
Wind dark;
Space smoky;
Thus the five elements concealed stand within.
Tamil Meaning:
(அவத்தைக்குக் காரணமான கருவிகளுள் மிக எளிதில் விளங்குவனவாகிய ஐம்பெரும் பூதங்களில்) நிலம் பசும் பொன்னிறத்தையும், நீர் வெண்மை நிறத்தையும், நெருப்புச் சிவப்பு நிறத்தையும், காற்றுக் கருப்பு நிறத்தையும், வானம் புகை நிறத்தையும் உடையன. இவற்றின் அதிதேவர்கள் இவைபோலப் புலனாகாது மறைந்து நிற்பார்கள்.Special Remark:
`அதிதேவர்கள்` என்பது ஆற்றலால்கொள்ளக் கிடந்தது. தத்துவங்களினின்றும் விடுபடுதற்கு அவற்றை வழிபடுதலும் ஒரு முறையாகும். அதன்பொருட்டு அவற்றிற்கு வடிவம் நிறம் முதலியன ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. அவ்வழிபாட்டிற்குப் பயன் தருபவர்கள் அவற்றின் அதிதேவர்களேயாதல்பற்றி அவர்களை இங்கு உடன் கூட்டி, `மறைந்து நின்றார்களே` என்றார். அதனானே, `இது வழிபாட்டு முறை` என்பது பெறப்படும். சித்தாந்த சாத்திரங்களில் நிறங்களோடு வடிவம் முதலியன கூறப்படுதல் காண்க. பசுமைப் பொன்மை` என மொழி மாற்றியுரைக்க. மூன்றாம் அடியில் தளை மயங்கி வந்தது. காரது மாருதம் - மேகங்களோடு சேர்ந்து வீசும் காற்று. ஈற்றடி உயிரெதுகை பெற்றது.இதனால் கருவிகளுள் சிலவற்றிற்குக் கூறற்பாலன சிலகூறப்பட்டுள்ளன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage