
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐயைந்தும்
ஏதம் படச்செய் திருந்த புறநிலை
ஓது மலம்குண மாகும்ஆ தாரமோ(டு)
ஆதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.
English Meaning:
Ninety-Six TattvasThe elements five, too
To sense organs additional function;
The five permeating each of Malas three,
Gunas three, and Adharas six;
Together with Tattvas thirty and six,
The organs of Avastas
Are six and ninety, in all.
Tamil Meaning:
தத்துவம் முப்பத்தாறனுள் பூதம் ஐந்து, ஞானேந் திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப்பதினைந்தும் புறக்குற்றங் களில் மூழ்கச் செய்கின்ற புறக்கருவிகளாம். ஆறு ஆதாரங்களும், ஒரு வகை மாயையாகச் சொல்லப்படுகின்ற பிரகிருதிகுணங்களும் அவத் தைக்கு ஏதுவாகும். அந்நிலையில் ஐந்தவத்தைகளுள் முதலாவதாகிய சாக்கிராவத்தையில் தொண்ணூற்றாறு கருவிகளும் தொழிற்படுவன வாம்.Special Remark:
எனவே, இது மத்தியசாக்கிராவத்தையாம் ஆறா தாரங்கள், முக்குணங்கள் இவையும் சில இடங்களில் தாத்துவிகமாகச் சொல்லப்படுகின்றன. `மலம்` என்றது மாயா மலத்தை, `கருவி தொண்ணூற்றாறு என்றது, எல்லாக் கருவிகளும் `குறைவின்றிச் செயற்படும்` என்றபடி.இதனால், மத்தியாலவத்தையின் இயல்பு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage