
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

இடவகை சொல்லில் இருபத்தஞ் சானை
படுபர சேனைகள் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.
English Meaning:
In Waking State Jiva is With Twenty-Four TattvasIn Jagra State
The Jiva of Tattvas five and twenty
Its position takes
In Eye-Brow centre;
With elephants Five, (sensory organs)
Infantry Five (motor organs)
Cavalry Five (internal sense potencies)
And Elements Five,
Inside Soldiery Four (the Antakaranas)
He with Tattvas twenty and four
Stands at the Gate of Waking (Jagra) state;
Thus, Tattvas stand in centres respective.
Tamil Meaning:
மேற்கூறிய மத்தியலாவத்தையின் இயல்பைக் கூறுமிடத்து உயிரினது செயற்பாடு, அனைத்துச் சுற்றங்களும் சூழ அரசன் உலாவருதல் போன்றதாகும். யானை இருபத்தைந்து, (இவை ஆன்மதத்துவங்கள்) குதிரை ஐந்து, (இவை காமம், வெகுளி, உலோபம், யோகம், மதம், என்னும் உணர்ச்சிகள்) அமைச்சர் நால்வர். (இவை நால்வகை வாக்குக்கள்) புறஞ் சூழ்ந்து வரும் சேனைகள் காலாட்படைகள் (இவை வித்தியா தத்துவங்களும், சிவ தத்துவங்களும்) சென்று சென்று நிற்கும் வாயில்கள் ஒன்பது. (இவை நவத் துவாரங்கள்) இங்ஙனமாக அறிக.Special Remark:
சொல்லாது விடுத்த தாத்துவிகங்களையும் உபலக் கணத்தால் ஏவலர் முதலியவராகக் கொள்ளல் வேண்டும். ஞானா மிர்தத்திலும்l கருவிகள் அரசச் சுற்றங்களாக உருவகித் திருத்தல் அறியத்தக்கது. இடம், அதன்கண் செயற்படும் கருவியைக் குறித்த ஆகுபெயர். படுதல் - பொருந்துதல். பரசேனை - வேறு நின்று சூழும் சேனை. `மத்திமை` என்பதின்பின் `ஆக` என்பது வருவித்து அதனை எண்களுடன் முடிக்க.இதனால், மேற்கூறிய மத்தியாலவத்தையின் இயல்பு இனிது விளங்குதற் பொருட்டு உருவகமாக்கிக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage