
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

நேரா மலத்தினை நீடைந் தவத்தையின்
நேரான வாறுன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.
English Meaning:
Be Freed of Malas to Reach GodIn the States Five,
In purity, vision Malas Five
That pure are not;
See, in the Waking State
They trouble you not;
Straight confront them;
Then shall you with Para direct,
Forever and ever be.
Tamil Meaning:
சகலத்திற் கேவலமாகவும், சகலத்திற் சகலமாகவும் இயல்பாக நிகழ்ந்து வருகின்ற அஞ்சவத்தைகளிலே பாகம் (பக்குவம்) எய்தாத ஆணவமலத்தைச் சகலத்தில் சுத்தமாய் நிகழும் சாக்கிரா வத்தையில் பாகம் எய்தியதாக அறிந்து, அதனானே பஞ்ச மலங்களும் பாகமெய்தியவற்றையும் நன்கு கண்டு, எஞ்ஞான்றும் தனது செம்மை யினின்றும் திரிதல் இல்லாத மேலான பொருளோடுகூடி நிற்பதே உண்மைச் சுத்தாவத்தையாகும்.Special Remark:
நீடு ஐந்தவத்தை - நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்ற ஐந்தவத்தை என்றதனால் அவை பந்த நிலையில் நிகழும் சகல ஐந்தவத்தைகளாயின. இதனை முன்னர்க் கூட்டியுரைக்க. `நீடு நனவு` என்னும் காலங்கந்த பெயரெச்சத் தொடர், `நீடுதற்கு ஏதுவாகிய நனவு` எனப்பொருள் தந்து, சுத்தசாக்கிரத்தைக் குறித்தது. `ஞானச்செய்தி` - எனப்படும் தச காரியத்துள் முதல் ஆறும் சுத்த சாக்கரமும், ஏனைய நான்கும் சுத்த சொப்பனம் முதலிய நான்குமாம். இவையே சகலத்தில் சுத்தமாம் ஐந்தவத்தைகள். இந்நிலையில் உயிர்தான் தன்னையும், தலைவனையும் அறிதலின் இதுகாறும் அங்ஙனம் அறியாதிருந்தது ஆணவ மலத்தாலே என்பதையும், இப்பொழுது அது நீங்கியதால்தான் இந்த அறிவு நிலை எய்தியதையும் வழியளவையானே தெளிவாக உணரும் ஆதலின் அதனையே, `நேரா மலத்தை நடு நனவினில் நேரானவாறு உன்னி` என்றார். `மூலமலத்தின் இயல்பு விளங்கவே, ஏனைய மலங்களின் இயல்புகள் தாமே விளங்க, எல்லா மலங்களின் இயல்பும் விளங்கினவாம்` என்றற்கு `முன்பு நேராதிருந்த மலம் ஐந்தையும் இப்பொழுது நேரே தரிசித்து` என்றார்.இந்நிலை துகளறு போதத்தில் `பத்தாம் அவதாரமாகிய கேவலாதீதம்` - எனக் கூறப்பட்டது.
சகலத்தில் சுத்தம் நிலையில்லாது மாறி மாறி நிகழ்வதாக, உண்மைச் சுத்தமே நீங்காது நிற்பதாகலின் அதனை `நித்தம்` என்றார்.
இதனால், `சகலத்தில் நிகழும் ஐந்தவத்தைகளில் சுத்த ஐந்தவத்தைகளும் உள` என்பதும், `ஆயினும் அவை நிலை யற்றனவாக, நிலையானவையாய்ச் சகலத்தோடு தொடர்பு சிறிதும் இல்லாத உண்மைச் சுத்தாவத்தைகளும் உள` என்பதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage