
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
இதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாக ஐயவத் தைப்படு வானே.
English Meaning:
Consciousness Begins With EgoityIn the Primordial Slumber State of Jivas (Kevala State)
Devoid of Awareness,
Egoity is activated;
Then Consciousness springs,
And actions diverse Jiva pursues;
From the State of Kevala
Thus passing out,
He the Five States (Avastas) experiences,
Until he becomes Para Supreme.
Tamil Meaning:
அறிவு சிறிதேனும் தொழிற்படாத, `ஒரு பேருறக்கம்` எனச்சொல்லத்தக்கது, ஆன்மா ஆணவத்தோடு மட்டும் இருக்கின்ற நிலை (அஃது `அநாதி கேவலம்` எனப்படும்). பின்பு அந்த ஆணவ மலத்தின் சத்தி மாயையினால் சிறிதே கெட, அந்த மாயை விளக்கும் அளவிற்கு அறிவு விளங்கப் பெற்ற உயிர், நீக்குதற்கரிய வினைக்கு ஈடான உணர்வையே உடையதாம் நிலையில் இன்பம் போல நிகழ்கின்ற அறியாமையில் செல்வதே சகலத்தில் கேவலம். இந்தக் கேவலத்தில்தான் ஆன்மாக் கீழாலவத்தை ஐந்தினையும் அடையும்.Special Remark:
ஆணவத்தின் சத்தி கெடுவது மாயையால் ஆதலின் அஃது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `கன்மத்தால் முன்னி` என உருபு விரிக்க. `கேவலம்` - என்பது `அறியாமை` என்னும் பொருட்டாய் நின்றது. `கேவலத்து` என்னும் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. பரம் - மேன்மை `பரம் ஆக` - என்றது `வேறு (கீழ்) ஆகின்ற` என்னும் பொருளைத் தந்தது. ஈற்றடி உயிரெதுகையாயிற்று.இதனால், கீழால் அவத்தை` - எனப்படுவன சகலத்தில் நிகழும் கேவல ஐந்தவத்தைகளாம் - என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage