
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

அனாதிசீ வன்னைம் மலமற்றப் பாலாம்
அனாதி அடக்கித் தனைக்கண் டரனாய்த்
தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
வினாவும்நீர் பால்ஆதல் வேதாந்த உண்மையே.
English Meaning:
Beyond Kalanta Vedanta-Siddhanta Leads to Yoganta and to Dance-BlissWait not for the day
To vision the Five Kalantas;
Take to the Way of
Vedanta-Siddhanta, that one are;
Then will you reach the Yoganta,
And there will you envision the Feet
Of the Eternal Dancer,
That is Siva.
Tamil Meaning:
பதியைப்போலவே பசுவாகிய சீவனும் அனாதி. அதற்கு அனாதியே ஒரு குற்றம் உண்டு. அந்தக்குற்றம் மேல் எழாமல் கீழாம்படி அடக்கினால் சீவன் தனது உண்மையைத் தான் உணரும். தன்னை உணர்ந்தால், பின் தலைவனை உணர்ந்து, அவனைச் சார்ந்து அவனாகி நிற்கும். அங்ஙனம் நிலையை அடைதற்பொருட்டுச் சீவன் அனாதிக்குப் பின் ஆதியாய் வந்த மலங்களும் நீங்கும்படி அவற்றைக் கடக்கும் முறையை ஞான குருவை அடைந்து வினாவும். பின் அவர் உபதேசித்தபடி நின்று, ஐந்து மலங்களும் நீங்கப் பெற்றுத் தூயதாய் உலகத்தைக் கடந்து நிற்கும். அந்நிலையில் அது சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆதல், நீர் பாலோடு சேர்ந்து பாலாதல் போல்வதாம். வேதாந்தத்தின் உண்மைப்பொருள் இதுதான்.Special Remark:
முன் மந்திரத்தில், `வேதாந்தப் பொருளைச் சித்தாந் -தத்தின் வழியாக உணர்தல்வேண்டும்` என்றமையால், `அதனை அவ்வாறு உணருங்கால் வேதாந்தப் பொருள் இவ்வாறாம்` என்றபடி.ஐம்மலம் - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி. இவற்றுள் ஆணவம் அனாதி; அன்றே உள்ளது. ஏனைய ஆதி; பின் வந்தவை. இரண்டாம் அடியில் ``அனாதி`` என்றது. அனாதியாய மலத்தை. அனாதிக்கு அந்தம் இல்லை ஆதலின், `அழித்து` என்னாது ``அடக்கி`` என்றார். ஆணவம் தவிர ஏனை நான்கும் ``ஆதி மலம்`` எனப் பட்டன. சம்பந்தம் ஆயினமை பற்றி, ``தத்துவாதீதம்`` என மாயே யத்தையே கூறினாராயினும் இனம் பற்றி அனுபந்தமும், சார்பு பந்தமு -மாய் உள்ள ஏனைய மலங்கட்கு அதீதம் ஆதலும் கொள்ளப்பட்டது. வினாவுதற்கு, வினாவப்படுவார் வருவிக்கப்பட்டார்.
சீவனை, `ஆதி` என்பாரை மறுத்தற்கு, ``அனாதி சீவன்`` என்றும், `மலம் இரண்டே` என்பாரை மறுத்தற்கு, ``ஐம்மலம் அற்று`` என்றும், ஆணவத்தைப் பலபட மயங்கிக் கூறுவாரை மறுத்தற்கு ``அனாதி மலம்`` என்றும். `சீவன் சிவனாதல் நீரும், நீரும் சேர்ந்து ஒன்றாதல் போல்வது` எனவும், `குடம் உடைந்த வழிக் குடாகாயம் மகா காயத்தோடு சேர்ந்து ஒன்றாதல் போல்வது` எனவும், மற்றும் இன்ன பிற போல்வனவாகவும் கூறுவாரை யெல்லாம் மறுத்தற்கு, ``நீர் பாலாதல்`` என்றும் கூறினார்.
``ஐம்மலம் அற்று அப்பால் ஆம்`` என்பதை ``வினாவும்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `அது நீர் பால் ஆதல் போல்வது` எனவும், `இதுவே வேதாந்த உண்மை` என்று எழுவாய்கள் வருவித்து, தேற்றேகாரத்தை மாற்றிவைத்துரைக்க. அதீதம் ஆதற்குரிய முறையை ``அதீதம்`` என்றார்.
இதனால், மேல் ``நாடில் இரண்டந்தம் பேதமதென்னில் பெரியோர்க் கபேதமே`` என்றது தெளிவிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage