
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம அவமமாம் அவ்வீ ரிரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்ததொன் றானால்
நவமான வேதாந்த ஞானம்சித் தாந்தமே.
English Meaning:
Of the Six Ends Vedanta and Siddhanta Alone Shoe the Path to Siva-BecomingSiva-Becoming
Is the goal of Vedanta and Siddhanta
The rest four Ends lead not to Siva-Becoming,
—Siva that is Sadasiva—
And so it is that Vedanta and Siddhanta
Are wondrous Ways indeed.
Tamil Meaning:
ஆறந்தங்களுள், `வேதாந்தம், சித்தாந்தம்` என்னும் இரண்டும், சீவன் சிவம் ஆதலைக் கூறுவதில் வேறுபட வில்லை. ஏனை, `போதாந்தம், கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம்` என்னும் நான்கும் ஒன்றின் ஒன்று கீழ்ப்பட்ட நிலைகளையே விளக்கி நிற்கும். வேதமும், சித்தாந்தத்தைக்கூறும் சிவாகமும், உண்மையில் `சிவம் எனப்படுகின்ற அந்தப்பொருளே, தடத்தத்தில் `சதாசிவன்` என்னும் பெயரையும், அதற்குரிய வடிவத்தையும் கொண்டு செய்த முதல்நூல் ஆகுமானால், அவற்றுக்கிடையே வேறுபாடிருத்தல் எங்ஙனம் கூடும். கூடாது. ஆகவே, வேதாந்த ஞானம், சித்தாந்த ஞானமேயாம்.Special Remark:
ஆதலைக் கூறுவனவற்றை ``ஆதல்`` என்றது உபசாரம். அவமம் - கீழ் (பரமம் ளு அவமம்). ``செய்தது`` எனவும், ``ஒன்று`` எனவும் கூறியது. `வடிவால் வேறாயினும், பொருளால் ஒன்றே` என வலியுறுத்தற்கு `வேதம் ஒருவரால் செய்யப்பட்டதன்று; தானே உள்ளது` எனக் கூறுபவர்க்கே (மீமாஞ்சகர்) வேதம் ஆகமத்தின் வேறாகும். `வேதமும் சிவனால் செய்யப்பட்டதே` என்பார்க்கு வேதமும் ஆகமந்தான் இது பற்றியே நீலகண்ட சிவாசாரியர், `வேதமும் ஆகமமே` (``வேதோபி ஆகம்`` சிவாத்துவித பாடியம் - பதியதிகரணம்) என்றார். வேதாகமங்கள் தோன்றிய வரலாற்றை முதல் தந்திர உரையிற் காண்க.நவம் - புதுமை; முதலிலே உணரப்படுவது` என்பது கருத்து.
இதனால், மேற்கூறியவற்றுள் வேதாந்த சித்தாந்தங்களது உயர்வு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage