
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வரும்அவை சத்திகள் முன்னா வகுத்திட்(டு)
உரன்உறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரன்உறத் தோயாச் சிவாநந்தி யாமே.
English Meaning:
Siva`s Concern For His DevotesIn His devotees is Siva seated
Into them He brings in
The Saktis that are of Siva
Then in His mighty Presence they (Saktis) act;
There the devoted remain ever
Immersed in Siva Bliss.
Tamil Meaning:
சிவன்பால் அன்புள்ளவர்களை இடமாகக் கொண்டு வெளியாகின்ற ஆற்றல்கள் எல்லாம் அவர்களுடைய ஆற்றல்கள் அல்ல; மற்று, சிவனிடத்தினின்றும் வெளியாகின்ற ஆற்றல்களே அந்த ஆற்றல்களின் முன்னிலையில் எல்லாப் பொருள் களையும் சிவன் நிற்க வைத்துச் செயற்படச் செய்தலால், உயிர் நிலையாகச் சிவானந்தத்தில் மூழ்கி, அவ்வானந்தமே மயமாம் நிலையை அடையும்.Special Remark:
`ஆகிவரும் அவை, சிவத்தினின்றும் வரும் சத்திகள்` எனவும் `அவற்றின்முன் வகுத்திட்டு எனவும், மொழி மாற்றியும், வேண்டும் சொற்களை வருவித்தும் உரைக்க சிவனது சத்தி, செயலாற்றுகையில் `அதிகாரசத்தி` எனப்பெயர் பெறும். அது சிவத்தினிடம் இருந்தே செயலாற்றாது, அவனுடைய அன்பர்களிட மிருந்தும் செயலாற்றும். அந்த அதிகாரத்து பதியப் பெறுதற்குப் புண்ணியம் வேண்டும் ``புரைத்ததி காரசத்தி புண்ணியம் நண்ணலாலே``l என்றது காண்க. செயல்கள் தாம் பலவாகலின், அவற்றிற்கு ஏற்ப அதிகார சத்திகளும் பலவாம். `இவை செயல் நோக்கியல்லது பொருள் நோக்கியல்ல` என்பதை,``சத்திதான் பலவோ என்னில், தான்ஒன்றே; அனேகமாக வைத்திடும் காரியத்தான்; மந்திரி யாதிக் கெல்லாம்
உய்த்திடும் ஒருவன் சத்திபோல்;அர னுடையதாகிப்
புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்தவாறாம்``l
என்பதனான் உணர்க.
அதிகார சக்திகள் பலவும் அவரவரது புண்ணியத்திற்குத் தக அவ்வவரிடம் பதிந்து ஏற்புடைய செயல்களைச் செய்யும் என்க. உரன் உறுதல், எல்லாவற்றையும் செய்தும் தான் நிலை திரியாது இருத்தல். ``முன்`` என்றதும், ``சந்நிதி`` என்றதும் வெறும் எதிர்முக மாத்திரை யன்று; `இஃது இவ்வாறு ஆகுக` எனச் சங்கற்பித்தலையேயாம். இத்தகைய சங்கற்ப மாத்திரையானே சிவன் எல்லாவற்றையும் செய்கின்றான் என்பதை உணர்க. சேட்டித்தல் - செயற்படுதல். ``சேட்டிப்ப`` என்னும் செயவெனெச்சம் காரணப்பொருளில் வந்தது. ``சிவாநந்தி`` என்றது சாதியொருமை. இதற்கு, `உயிர்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. `சிவத்தினின்றும் வரும் சத்திகள்` என்றதனால், `அவற்றின் முன்னாக வகுத்தவன் சிவனே` என்பது பெறப்பட்டது. ``வகுத்திட்டு`` என்னும் செய்தென் எச்சம். `ஆசிரியன் சொல்லி, மாணாக்கன் அறிந்தான்` என்பதுபோலக் காரணப் பொருட்டாய் நின்றது. `வகுத்திட்டுச் சேட்டிப்ப` என இயையும்.
இதனால், முன்மந்திரத்தில், ``ஒருவனே தலைவன்`` என்றது பற்றி, `தலைவர் பலராதலைக் கண்டும், கேட்டும் அறிகின்றோமே; அஃதென்` என்று எழும் ஐயம் தீர்க்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage