
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

ஆறந்த மும்சென் றடங்கும்அஞ் ஞேயத்தே
ஆறந்தம் ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறிஉடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே.
English Meaning:
The Six Ends Merge in JnanaIn that Jnana, (Divine Knowledge)
The Six Antas (ends) merge;
That Jnana (Knowledge) in the Knower (Jnani) merges;
When Knowledge in the Knower merges;
Then dawns Mauna (Divine Silence)
That is Siva-Bliss.
Tamil Meaning:
ஆறந்தங்களிலும், `ஞாதுரு ஞானத்துடன் சென்று, ஞேயத்தில் அடங்குதலைத்தான் முடிநிலையாகக் கூறுகின்றன. ஆகவே, ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தில் சென்று அடங்குதல்தான் ஆறந்தங்களின் குறிக்கோளும். ஆயினும், `ஞேயத்தில் அடங்குதல் மட்டுமன்றி, அவ்விடத்தில் எல்லையில்லாததோர் இன்பநுகர்ச்சியில் ஞாதுரு மூழ்கியிருத்தலே உண்மைப்பேறு` எனக் கூறுகின்ற சித்தாந் -தமே ஏனை அந்தங்களினும் வடித்தெடுத்த மோன நிலையாகும்.Special Remark:
இரண்டாம் அடியை முதலில் வைத்து, `ஆறந்தமும், ஞாதுரு, ஞானக்குறி உடன்வீட, ஞேயம் அடங்கிடும்; (ஆகலான்) ஆறந்தமும் சென்று அஞ்ஞேயத்தே அடங்கிடும்; (ஆயினும்) சிவானந்த உண்மையே தேறிய மோனம்` எனக் கூட்டி முடிக்க.அடங்கிடுதலைக் கூறும் அந்தங்களை, அவையே அடங்குவனவாக உபசரித்துக் கூறினார். ``அஞ்ஞேயம்`` என்னும் சுட்டு, பின்னர்க் கூறப்படும் அடங்குதல் தொழிலையை உட் கொண்டது. ``ஆறந்தம்`` இரண்டில் பின்னதிலும் உம்மை விரித்து, `ஞேயத்தின்கண்` என உருபுவிரிக்க. `ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தின்கண் அடங்கிவிடும் அளவே முத்தியாவது என, அவ் விடத்து, பெறுவானையும், பேற்றினையும் அழித்துச் சில அந்தங்கள் கூறும் ஆகலின், அதனை மறுத்துச் சித்தாந்தத்தை வலியுறுத்துதற்கு, ``தேறிய மோனம் சிவானந்த உண்மையே`` என்றார்.
``முத்தியிலும் மூன்று முதலும் மொழியக்கேள்;
சுத்தஅனு போகத்தைத் துய்த்தலனு; - மெத்தவே
இன்பம் கொடுத்தலிறை; இத்தைவிளை வித்தல்மலம்;
அன்புடனே கண்டுகொளப் பா``8
என்பதே சித்தாந்தம் ஆதலை யறிக.
இதனாலும், சித்தாந்தத்தின் தலைமையே ஏதுக் காட்டி வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage