
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி அருளிய கோனைக் கருதுமே.
English Meaning:
Lord Revealed Truth of Vedanta-SiddhantaHaving been blessed by Grace of Sakti,
That Siva espoused,
The Holy Nandi, that is Lord of Celestials,
Granted His Feet;
Beckoning me to Him
He revealed the Truth Exalted
Of Vedanta-Siddhanta,
—Him, the Lord, meditate on.
Tamil Meaning:
தேவரையெல்லாம் தம் ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சி புரிகின்ற, எங்களுடைய புகழ்மிக்க நந்திபெருமானே, நாங்கள் (`வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு வேறு` எனக் கூறிப்பிணங்குவார் பின் சென்று) கெடாதபடி எங்களை அறைகூவி அழைத்துத் திருவடி தீக்கை செய்து, `அவ்விரண்டிலும் சொல்லப்படுகின்ற உண்மை ஒன்றே என்பதையும், அவ்வுண்மையின் உயர்வையும் இனிது விளங்க உபதேசித்தருளிய ஞான குருவாவார். பசுக்களாகிய அனைத்துயிர் களையும் அடிமையாக உடைய சத்தி ஆதி சத்தியாய் நின்று ஆட்டிப் புடைக்கும் நிலையில், சிவனும் ஆதிசிவனாகவே அவளுடன் இருந்தவன், அந்நிலையை மாற்றித் தனது இயற்கை நிலையாகிய அநாதி சிவனாம் பரமசிவனாகி வந்து, அவளைத் தழுவிக்கொண்ட பின்பு, ஏனையோர்க்கும் எங்கட்கு அருளியவாறே அருளுமாறு அவன் அந்நந்தி பெருமானைத் திருவுள்ளத்தில் எண்ணுவான்.Special Remark:
`அப்பொழுது அவ்வுண்மை ஏனையோர்க்கும் இனிது விளக்கப்படும்` என்பது குறிப்பெச்சம். `பசு` என்னும் வடசொற்கு நேரிய தமிழ்ச்சொல் `ஆ` என்பதாதல் பற்றி அதனையே கூறினா ராயினும் அது `பசு`, அஃதாவது, `பாசத்தில் கட்டுண்டது` என்னும் பொருளையே தருதலின், `உடையாள்` என்றது ஆதிசத்தியை, அஃதாவது திரோதான சத்தியையேயாயிற்று. ``அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம்`` என்ற இடத்திலும் `உலக வாழ்க்கையைத் தரும் அவள்` என்றது, திரோதான சத்தியையே யாதலை நினைக. `அரன்` - என்பது, `பாசங்களை அரிப்பன்` என்னும் பொருளது ஆதலின் அஃது, `அநுக்கிரகத்தைச் செய்பவன்` என்னும் பொருட்டாய்ப் பரமசிவனைக் குறித்தது. உயிர்கட்கு இருவினை யொப்பு மலபரிபாகம் வரும் பொழுதே திரோதான சத்தி அருட் சத்தியாய் மாறி ஆன்மாவிற்பற்றி, அரன் அப்பொழுதுதான்வந்து மணப்பவன் போலக் கூறினார். இது, `சத்தி நிபாதம் வந்த பின்பு` எனக் கூறியவாறேயாம். ``கோனை`` என்பது, `கோன் ஆவன்; அவனை` என இருசொல் தன்மைப்பட்டு நின்றது. ``கருதும்`` என்னும் `செய்யும்` என்முற்று, இங்கு ஆண்பால் படர்க்கையில் வந்தது. `அரன் வந்து கொண்டபின் கோனைக் கருதும்` என முடிக்க. தமக்கு அருள்புரிந்த வகையைக் குறித்து `நந்திபெருமானையே கருதுவன்` என்றா ராயினும், `அவரவருக்கு ஏற்புடையாரைக் கருதுவன்` என்றலே கருத்தாம். முதல் அடியை, ``கோனை`` என்பதன் பின்னர்க்கூட்டுக.இதனால், `ஆறந்தங்களில் வேதாந்த சித்தாந்தங்களே மேலானவை` என்பது குருவருள் பெற்றபின் விளங்குதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage