
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

அன்றாகும் என்னாதை ஐவகையந் தந்தம்மை
ஒன்றான வேதாந்தம் சித்தாந்தம் முன்னிட்டு
நின்றால் இயோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.
English Meaning:
Beyond Kalanta Vedanta-Siddhanta Leads to Yoganta and to Dance-BlissWait not for the day
To vision the Five Kalantas;
Take to the Way of
Vedanta-Siddhanta, that one are;
Then will you reach the Yoganta,
And there will you envision the Feet
Of the Eternal Dancer,
That is Siva.
Tamil Meaning:
வேதாந்தத்தைத் தவிர மற்றை ஐந்து அந்தங்களை, `உண்மையல்ல; போலி என்று இகழாதே தலையாய வேதாந்தத்தைச் சித்தாந்தத்தின் வழியாக உள்ளவாறுணர்ந்து நின்றால், யோகாந்தம் செயல்முறையில் வாய்க்கும். அது வாய்த்தால், மன்றாடியாகிய சிவனது திருவடிப்பேறும் கூடும்.Special Remark:
அன்று, பன்மையொருமை மயக்கம். ``என்னாதை`` என்பது, எதிர்மறை ஒருமை ஏவல். இஃது, `என்னாதே` என மருவி வழங்கும். ``அன்றாகும் என்னாதை` என்பதை முதல் அடியின் இறுதியிற் கூட்டுக. உணர்வு முறையில் சித்தாந்தம் முடிவானதாயினும், செயல் முறையில் அதற்கு முதற்படி யோகாந்தம் என்றபடி. அனைத்து அந்தங்களும் படிமுறையில் வேண்டுவன ஆதலின் அவற்றை, ``அன்றாகும் என்னாதை`` என்றார்.இதனால் ஆறந்தங்களும் படி வழியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage