
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.
English Meaning:
Grace TransformsO! Ye who were blessed by Her Grace
Tell these men,
How this Mother that rules worlds all
Of Divine Jnana filled
Transformed your inconstant thoughts,
And made you realize god-truth;
Her Holy Feet, I adore ever.
Tamil Meaning:
மனிதர்களே, நான் மயக்கம் பொருந்திய என் மனத்தை மாற்றி உண்மையை உணரப் பெற்ற அதன்கண், புவனங்கள் அனைத்துமாய் நிற்றல் பற்றி, `புவனை` எனப்படுகின்ற திரிபுரைக்குத் தலைவனாகிய சிவனது, அரிய பொருளாய்ப் பொருந்திய செம்மை யான திருவடிகளையே போற்றுவேன்; உங்களில் அருள் பெற்றவரா யுள்ளோர் என்னுடன் வாருங்கள்; அனைவரும் ஒருங்கு கூடிப் போற்றுவோம்.Special Remark:
`பொருள் பெற்ற சிந்தையில் உற்ற புவனாபதியார் சேவடி` என இயைத்துக் கொள்க. `சத்தி வழிபாடு சிவனை நீக்கிச் செய்யப்படுவதன்று` என்பது உணர்த்தியவாறு.இதனால், சத்தி வழிபாட்டின் கண்ணது ஓர் ஐயம் அறுக்கப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage