
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.
English Meaning:
Tiripurai`s FormOn Her Feet she wears anklets,
She adorns red silk dress,
Her breasts are in corsets contained,
She sports arrows of flowers,
And bow of sugarcane,
And mighty goad-noose strings;
On Her lovely head She wears the diadem
On Her ears She wears Kundalas
Of bluish radiant gems.
Tamil Meaning:
திருவடிகளில் சிலம்பு, இடையில் சிவந்த பட்டுடை, மார்பில் கச்சு, நான்கு கைகளிலும் கரும்பு வில், மலர்க்கணை, அங்குசம், பாசம், சென்னியில் நவமணிகளின் அழகு விளங்கும் முடி, காதுகளில் நீல ரத்தினம் மின்னுகின்ற குண்டலம் - இவைகளே திரிபுரைக்கு உள்ள அடையாளங்களாம்.Special Remark:
``குண்டலக் காதிக்கு`` என்றது உடம்பொடு புணர்த்ததாகலின் அதற்கு இவ்வாறு உரைத்தல் கருத்தாயிற்று.``பனிமலர்ப்பூங் - கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங் [குசமும் கையில்
அணையுந் திரிபுர சுந்தரி யாவதறிந்தனமே`` 1
எனப் பின்வந்த அடியார் ஒருவரும் அம்மைதன் திருவடிவை இங்ஙனமே கூறினார். இவ்வடிவத்தை `இராசேசுவரி கோலம்` என்பர். முதலடி இனஎதுகையாய் நின்றது.
இதனால், திரிபுரையது ஒருவகைத் தியான உருவம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage