
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.
English Meaning:
She Merged in My HeartShe who thus stands is in jewels bedecked,
With beaming Kalas She entered my heart,
The seven worlds to adore
She entered the Holy Dance arena;
She is Manonmani, the Jewel of Inmost Thought,
She is Ever-Auspicious, (Mangali)
And in me She merged, inseparate ever.
Tamil Meaning:
மேற்கூறியவாறு எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய திரிபுரை, மனத்துக்கு மேலே உள்ளவளாயும், அழியாத மங்கலத்தை யுடையவளாயும் இருப்பவள். தனது பல வகைப்பட்ட நிலைகளுடனும் என் உள்ளத்தில் பொருந்தியும், உலகமெல்லாம் வணங்கும்படி அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் வேறற நிற்க இசைந்து, அங்ஙனமே வந்து நின்றாள்.Special Remark:
`நின்றவளாகிய நேரிழை` என்க. கலை - கூறு. ``அகம் படிந்து`` எனவும், ``மன்றது ஒன்றி`` எனவும் கூறியன, அகத்தும் புறத்தும் விளங்குபவளாதலைத் தெரித்தனவாம். `அவளொடு ஒன்றுகின்ற என்னோடு அவளும் ஒன்றி நின்றாள்`` என்றதனை,``அற்றவர்க்கு அற்ற சிவன்`` 1
எனவும்,
``தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்பன்`` 2
எனவும் வருவனவற்றோடு வைத்துக் காண்க ``ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்`` என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்`` எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. ஒத்தல் - உள்ளம் ஒத்தல்; இசைதல்.
இதனால், திரிபுரை அன்பர்களையே அடைதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage