
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.
English Meaning:
She is Support for Devotee`s JnanaFrom Her emanates all enjoyments,
She is of curly tresses that Grace grants,
She is Para Sakti that shares Siva`s Form,
She stands as support
For tender Jnana Vine,
That Her devotees daily in their hearts grow.
Tamil Meaning:
அடியார்கள் நாள்தோறும் தங்கள் உள்ளத்தில் தியானிக்க, அங்ஙனம் தியானிக்குந்தோறும் அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படர்தற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தியே, முன்பு ஒரு கூற்றில் அவ் விடத்துத் திரோதான சத்தியாய் நின்று, பின் அருட் சத்தியாயே விளங்குவாள்.Special Remark:
``அடியவர் நாள்தொறும் ஆகம் செய்தாங்கே`` என மாற்றி, அது முதலாகத் தொடங்கி உரைக்க. `அகம் செய்தல்` என்பது முதல் நீண்டது. அங்கு, ``செய்து`` என்றது, `செய` என்பதன் திரிபு. `பாகம் செய் கொம்பு` என இயையும். இங்கு, பாகம் செய்தல், பக்குவப்படுத்தல். முன் வந்த `பாகம் செய்தல்`, பங்கில் கொள்ளுதல். போகம்செய் சத்தி, திரோதான சத்தி. `போகம் செய் சத்தியாகிய புரிகுழலாள்` என்க.இதனால், திரோதான சத்தி அருட் சத்தியின் வேறாகாமை கூறப்பட்டது. அருட் சத்தியது இயல்பும், திரோதான சத்தியால் உளதாகும் பயனும் என்னும் இவைகளும் அனுவாத முகத்தால் ஈண்டே கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage