
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.
English Meaning:
What the Wise Say of HerThey who know say, Parasakti is Bliss;
They who know say, She is Formless,
They who know say, all action from Her desires flows;
They who know say, Param is in Her.
Tamil Meaning:
திரிபுரையை அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை, `ஆனந்தமாய் இருப்பவள்` என்றும், `அருவமாயும், உருவ மாயும் விளங்குபவள்` என்றும் `நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையினள்` என்றும் கூறுவர். அதனால், அறிவுருவின னாகிய சிவனும் அவள் வழியாகவே தோன்றுவான்.Special Remark:
அருவமும், உருவமும் கூறவே, அருவுருவம் கொள்ளப்படும். மூன்றாமடி நான்காமடிகளில் ``அறிவார்`` என்ற வற்றை, `அறிவு ஆர்` எனப் பிரித்து. `ஆர்ந்த அறிவு` முதலியன வாகவும், `அறிவாய் ஆர்ந்த பரனும்` எனவும் உரைக்க. இரண்டாம் அடியை `அறிவுரு` எனப்பாடம் ஓதுவாரும் உளர். அவர்க்கு அவள் அருவம் முதலியன ஆதல் கிடையாமை அறிக. மூன்றாம் அடியிலும் `அவள்` என்பதை ``இச்ை\\\\u2970?`` என்பதன் பின் கூட்டுக. ``இடம்`` என்றது, `வழி` என்றவாறு.இதனாலும், வேறும் சில பெருமையே கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage