
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.
English Meaning:
Tiripurai is Power That SustainsParasakti, Maha Sakti, She is;
In ways countless She is Power that supports all,
She is Sakti pervasive,
She is Sakti that protects through timeless aeons
She is Supreme Pleasure that all blessings confers,
This you know not.
Tamil Meaning:
`திரிபுரை` என்னும் சத்தியே மேலானவளும், பெரியவளும் ஆவள். அதனால், அவளே பல்வேறு வகையான காப்புச் சத்தியாய் நிற்றலை, மாணவனே, நீ அறிவாயாக. இனி, அக் காப்புத்தான், திரிவுபடுகின்ற ஊழிகள் தோறும் உடனாய் நின்று புண்ணியத்தின் பயனாகிய உலகின்பத்தைத் தருதலேயாம்.Special Remark:
``புரா சத்தி`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. தரா சத்தி - தாங்கும் சத்தி. தாங்குதல், காத்தல், உராவுதல், திரிவு படுதல். புண்ணியத்தின் பயனை, `புண்ணியம்` என்றே கூறினார். பெத்தத்தின் வகையாகிய முத்தொழில்களுள் கன்மத்தை நுகர்விப்பது காத்தலேயாகலின், அஃது ஒன்றனையே திரோதானசத்தியது தொழிலாகக் கூறினார். பாவத்தின் பயனாகிய துன்பத்தைத் தருதல் விருப்பின்றிச் செய்யப்படுவதாதலின், அதனையொழித்துப் புண்ணியத்தின் பயனாகிய இன்பத்தைத் தருதல் ஒன்றையே கூறினார். `முன்னர்த் திரோதான சத்தியாய் உலகின்பத்தையும், பின்னர் அருட் சத்தியாய் வீட்டின்பத்தையும் தருபவள் திரிபுரை` என்பது குறிப்பு. பிற்பகுதியில் `அச்சத்தி` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.இதனால், திரிபுரை ஒருத்தியே திரோதான நிலையில் பல்வேறு வகையினளாய் நின்று உயிர்களைப் புரத்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage