
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.
English Meaning:
She Pervades the Sixteen KalasShe is the Mother of Tender Form
That pervades Medha and the rest of Kalas sixteen;
She is the Paraparai that shines in Vedas and scriptures holy,
She is the widespread support of all that is,
She is the Grace within Nada and Nadanta.
Tamil Meaning:
திரிபுரை, மேதை முதலிய பிராசாத கலைகள் பதினாறுமானவள்; வேதம் முதலிய நூல்களின் பொருளாய் விளங்குபவள்; `இலயம், போகம்` என்னும் மேல் நிலையிலும் `அதிகாரம்` என்னும் கீழ் நிலையிலும் இருப்பவள்; எல்லாப் பொருள் கட்கும் நிலைக்களமாய் நுணுகிப் பரந்த வியாபகத்தை உடையவள்; நாதத்திற்கு முதலாகிய பரநாதத்தில் நிற்கும் அருள் வடிவானவள்.Special Remark:
`அவளது பெருமையை இவ்வாறு அறிந்து கொள் ளுங்கள்` என்பது குறிப்பெச்சம். எழுவாய் மேலை மந்திரத்தினின்றும் வந்தது. `பிரசாத கலைகள் பதினாறு இவை` என்பது முன்னைத் தந்திரத்திற் காட்டப்பட்டது.இதனால், திரிபுரையது மிக்க பெருமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage