
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.
English Meaning:
Tamil Meaning:
தோற்பை போன்றதாகிய இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவது தான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை நன்கு முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணப் பலரும் புகழ்ந்து போற்றினாலும் அதனால் பெறப்படு வதுதான் யாது!Special Remark:
`பெருமை சிறுமைகளும், பேறிழவுகளும் எஞ் ஞான்றும் உயிர்க்கே யன்றி உடம்பிற்கு இல்லை` என்றவாறு, இவ் வுண்மை உணர்த்தற் பொருட்டே இவ்வாறு கூறினமையால், பின்னர்,அந்தமில் ஞானிதன் னாகம்வெந் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெம்பும்வெந் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்குறி னுண்செரு
வந்துநாய் நரிக்குண வாம்வை யகமே. -தி.10 ஏழாம் தந்திரம்
என்பதனோடு இது முரணாமை அறிக. அதனானே, உலகியலில் நின்றாரது உடம்பை நல்லடக்கம் செய்தலும் அவரது மறுமை நலன் நோக்கி என்பதும் பெறப்படுவதாம், உடம்பு உயிராகாமை உணர்த் துவார் அதனைக் கூத்தன் புனைந்து கொள்ளும் கோலத்தோடு உவமித் தற்கு, உயிரை, ``கூத்தன்`` என்றார். அதனானே, உடம்பும், அது வாயிலாகச் செய்யப்படும் செயல்களும் உயிர்க்கு என்றும் உள்ளன வாகாது, சிறிது காலம் வந்து நின்று நீங்குவனவாதலும் பெறப்பட்டது. ``புறப்பட்டுப் போன`` என்றதன் பின், `பின்` என்பது வருவிக்க. அவ்வாறு வருவியாதவழி, `இக்கூட்டை` என்றது, உயிர் நீங்கிக் கிடந்த ஓர் உடம்மைச் சுட்டிக் கூறிற்றாக உரைக்க. `இச்சட்டையை` என்�%A
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage