
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.
English Meaning:
Vigil and Wisdom Alone Accompany the Departing SoulThis roof of delights, when by use, to pieces falls,
Wife nor children who all enjoyed follow the parting Soul
Only the holy vigils kept and wisdom gained
Remain to save—others dwindle and desert us all.
Tamil Meaning:
பல பண்டங்களை நிரப்பிவைத்துள்ள இல்லம் போல்வதாகிய உடம்பு, உழைத்துத் தளர்ந்து வீழ்ந்தொழியுமாயின், அவ்வுழைப்பால் பயன் கொண்ட மனைவியரும், மக்களும் அவ்வுடம் பினுள் நின்ற உயிராகிய இல்லத் தலைவரைப் பின் தொடர்ந்து செல்லும் வலியிலராவர். இனிச் சுற்றமும் பொருளும் முதலாயினதாம் அவருடன் செல்லுமோ எனின், அவர் மேற்கொண்டு செய்த தவமும், அதன் பயனாக உண்டாகிய ஞானமும் அல்லது பிறிதொன்றும் அவரோடு உடன் செல்லாது.Special Remark:
`அதனால், பெண்டிர், மக்கள் முதலியோர்க்கு உழைத்தலை விடுத்து, அவ்விரண்டையுமே பெற முயல்க` என்பதாம். `பெண்டிர் மக்களேயன்றிப் பிறவும் செல்லா` என்றற்கு, ``நடவாதே`` எனப் பின்னருங் கூறினார்.கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செயல் ஆவதென் ஏழைகாள்!
நல்லத் தான் நமை ஆளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேல்துயர் தீருமே. -தி.5 ப.43 பா.1
என்றார் அப்பரும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage