
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேற்றிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.
English Meaning:
They Hurried the Body to FlamesDeath strikes from life`s enchanted cup
Honeyed delights of wife, cherished treasures of heart;
Kinsmen bore him on bier to the common burning ghat,
And the burden discharged, hurried home,
Having done their part.
Tamil Meaning:
எவன் ஒருவனையும் ஊரார் அவன் மனைவியும், செல்வமும், மாளிகையும் ஊரிலே நின்றுவிட, ஒரு நடைப்பரண்மேல் ஏற்றி, ஊர்க்குப் பொதுவாய்ப் புறத்தே உள்ள சுடுகாட்டை நோக்கிச் சுமந்து சென்று, உள்ளத்தில் அன்பு மேம்பட்டு எழ எடுத்து வைத்துவிட்டுப் போவதையே பார்க்கின்றோம்.Special Remark:
`அதற்குமேல் அவர்களால் என்ன செய்ய இயலும்! ஆகவே, நாட்டுக்கு நாயகனாகியும், ஊருக்குத்தலைமகனாகியும் இருக்க முயல்வதனால் பயன் என்னை` என்பதாம். மது, தேன் போன்ற அன்பு.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage