
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.
English Meaning:
Pomp and Glory Lead But to the GraveIn pride of pomp a stately mansion he built,
In rage of wealth into the palanquin he stept,
In vain excess gave away largesses in crores,
But, he ne`er went to say, `Oh! God`` and roamed.
Tamil Meaning:
நம்பி(சிறந்த ஆடவன்) ஒருவன் தன் முயற்சி யாலே பெரும் பொருள் ஈட்டிப் பலரும் வியக்கப் பல மேல் நிலைகளோடு கூடிய மாளிகையைக் கட்டினான். அவன் அதனைக் கட்டியதும் வெற்ற வெளியான இடத்திலேதான். பின் அவ்விடத் திற்றானே நான்குபேர் சுமக்கின்ற ஒரு பல்லக்கைப்பெற்று அதில் ஏறினான். அங்கு அப்பொழுது அவன் தன் மனைவிக்கும், மகனுக்கும், ஊர்த் தோட்டிக்கும் ஒவ்வொரு புத்தாடையை வழங்கினான். ஆயினும், பலர் நின்று, `தலை வனே` என்று கூப்பிட்டுக் கதறவும், திரும்பாமலே போய்விட்டான்.Special Remark:
`எத்துணைப் பெருஞ் செல்வத்தாராயினும் `இறந்தார்` என்னும் இகழ்ச்சியைப் பெறாதொழிந்தவர் இல்லை. என்றவாறு.மலைமிசைத் தோன்றும் மதியம் போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில். -நாலடியார் 21
என்று அறநூல் கூறுதலும் காண்க. ``சிவிகை`` என்றது. புகழ்வது போலப் பழித்தல். ``முக்கோடி`` என்றது சிலேடை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage