
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே.
English Meaning:
When Body Roof Falls, It Falls ForeverTwo pillars support this roof and one single beam,
Thirty and two the rafters extend sideways,
But as the roof above decays and breaks,
Back to its mansion the breath of life fails its way to trace.
Tamil Meaning:
உடம்பாகிய இல்லத்திற்குத் தாங்கும் தூண்களும் (நடக்கின்ற கால்கள்) இரண்டு உள்ளன. மேட்டு உத்தரமும் (முது கெலும்பு) ஒன்று உண்டு. அவ்வுத்தரத்தின் இருபக்கங்களிலும் சார்த்தப் படுகின்ற பருத்த கழிகளும் (விலா எலும்புகளும் - பக்கத்திற்குப் பதினாறாக) முப்பத்திரண்டு உள்ளன. மேலே வேயப்பட்ட கூரை களும் (பலவகையான தோல்கள்) உள்ளன. இருப்பினும். உயிர் இந்த இல்லத்தில் நிலைத்திருப்பதில்லை; என்றாயினும் ஒரு நாள் புறப் பட்டுப் போய்விடும். போய்விட்டால் மீள வந்து முன்போல இதனுட் புகுதல் இல்லை.Special Remark:
`கால் இரண்டும் முகட்டு அலக்கு ஒன்றும் உள` எனவும், `மேற்கூரையும் உள` எனவும், `உயிர் பிரியும்; பிரிந்தால் முன்போல் மீளப் புக அறியாது` எனவும் கொள்க. `நில்லாது பிரிதலும், பிரிந்தால் மீளப் புகாமையும் உடைமை யாலும், வேறாகச் சென்று புகப்படுவது இத்தன்மைத்தாய மக்களுடம் பேயாய் இருக்கும் என்றல் கூடாமையாலும் அங்ஙனம் பிரியுங்காலம் வருதற்கு முன்பே மேற்குறித்தவற்றைத் தேடிக்கொள்க` என்பதாம்.என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்
திதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான்
முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தல்ஆர் குரம்பையின்
மூழ்கி டாதே
அன்பன்ஆ ரூர்தொழு துய்யலாம் மையல்கொண்
டஞ்சல் நெஞ்சே.
என(தி.2 ப.79 பா.8)ச் சம்பந்தரும்,
கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீரால் சுவரெடுத் திரண்டுவாசல்
ஏல்வுடைத் தா அமைத்தங் கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே.
(தி.4 ப.83 பா.4) எனவும்,
``இருகாற் குரம்பை இதுநான் உடைய திது பிரிந்தால்
தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே``
(தி.4 ப.113 பா.2) எனவும், அப்பரும் உடம்பை இல்லமாக உருவகித்தல் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage