
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
English Meaning:
Final Procession to GraveLord was he of our land, sole leader of our place,
Mounted now on palanquin for the ultimate journey`s end;
Mourners walked behind, clashing drums beat afore;
Thus did the solemn show in ample length, extend.
Tamil Meaning:
ஒருவன் நமது நாட்டிற்கே தலைவன் தான்; `அவன் நம் ஊரவன்` என்பதில் நமக்குப் பெருமைதான்; ஆயினும், நடை முறையில் நிகழ்வது, அவனும் காட்டுக்குப் போதற்குரிய ஒரு பல்லக்கின் மேல் ஏறி, நாட்டில் உள்ளோர் பலர் பின்னே நடந்து செல்ல, முன்னே பறைகள் பல கொட்டச் செல்லுகின்ற முறைமைதான்; வேறில்லை.Special Remark:
`காட்டுச் சிவிகை` என்பது அடைவேறுபடுத்துப் பொருள்புலப்படுத்தல். இதனை, `வெளிப்படை` (வெளிப்படுத்தல்) என்பர். இங்ஙனங் கூறியது இகழ்ச்சிக் குறிப்பு. `நிகழ்வது` என்பது சொல்லெச்சம். ``நாட்டுக்கு நம்பி`` என்றது, சுட்டளவாய் நின்றது. `நம்பியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `அரசராயினும் நிலையாமையைக் கடக்கமாட்டார்` என்றதாம்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage