
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுற மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.
English Meaning:
Kith and Kin Wept and LeftThe roof to pieces went, the bonds of life broke loose,
The mansion`s nine gates closed fast for ever and aye,
Time`s painful march fast gaining apace,
One by one weeping they left him as the hours passed by.
Tamil Meaning:
தீய ஊழ் விரைய வந்தமையால், தங்க நிழல் தரும் பந்தல்போல்வதாகிய உடம்பு நிலைகெட்டு விட்டது. அதனால் அதற்குள் கருவூலம் போல இருந்த உயிர், காவலற்றுக் கொள்ளை போகும் நிலையை (யமதூதுவர் கொண்டு செல்லும் நிலையை) அடைந்து விட்டது. பந்தலில் ஒன்பது வாயில்கள் அமைக்கப் படிருந் தன; அவை அனைத்தும் அடைபட்டு விட்டன. அன்புடைய சுற்றத் தார் என் செயவல்லார்! தொடர்ந்து அழுததோடு போய்விட்டனர்.Special Remark:
இத்திருமந்திரம் பிசிச்செய்யுள். இவ்வாறு வருவன இந்நூலிற் பல உள. பின்வந்த `சித்தர்` என்போர் இம்முறையைப் பெரிதும் கைக்கொண்டனர். துரிசு, விரைவுப் பொருட்டாகிய, `துரிதம்` என்பதன் சிதைவு. நிலையாக நிற்கும் இடம் அன்மையால், உடம்பை, `வழியிலே தங்கும் பந்தல்` என்றார். திருவள்ளுவரும், `துச்சில்` (திருக்குறள். 340) என்றார். `மனைவி முதலாயினார் உண்மையில் அன்புடையர்களாயினும், அவர்களால் நிலையாமை விலக்க ஒண்ணாது` என்றபடி. `அதனால், இறைவனைத் துணையாகப் பற்றுதலே நன்று` என்பதாம்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage