
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
English Meaning:
The Body Temple Crumbled; the Ninety-Six Tattvas FledThe thirty and thirty and thirty-six they say,
They that behind temple walls safely dwelt.
They saw the temple walls crash and crumble,
And all alike, without a trace, thence did run.
Tamil Meaning:
வினையாகிய மதிலால் சூழப்பட்ட உடம்பாகிய உட்கோட்டையில் வாழ்வன் தொண்ணூற்றாறு தத்துவதாத்து விகங்கள். அவை அனைத்தும் அம்மதில் சிதைந்தால் ஒருசேர விைரய நீங்கும்.Special Remark:
செப்ப மதில் - செம்மையான மதில். மதில் இன்றிக் கோட்டை இன்மையால், மதில் சிதைதலை, `கோட்டை சிதைதல்` என்றார். `தத்துவதாத்துவிகங்களின் காரியமே உடம்பு` என்பதும், காரியம் தோற்றமும், முடிவுமாகிய எல்லைகளை உடையன ஆதலின், உடம்பாகிய காரியம் வினையின் எல்லையையே எல்லையாக உடையது என்பதும், `அதனால், அவ்வினை நீங்கவே, உடம்பு நீங்கும்; அதனால் நாடும், ஊரும் துணையாகா` என்பதும் கூறியவாறு.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage