
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகிஉள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டஅப் பாய்கரு ஒப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.
English Meaning:
Kundalini Fire is Parallel to Sacrificial FireAs in the nine sacrificial pits that transcend Time,
The Yogi in his Nadis raises the fire in Centres nine;
Even as the Seed of Birth trembled in fear of it,
So did the universe vast,
At the mighty yogic achievement.
Tamil Meaning:
அக வழிபாடாகிய யோகத்தை நன்கறிந்த யோகி, மேற்கூறியவாறு பல யுகங்கள் அழியாதிருத்தற்கு ஏதுவாகிய நவ குண்ட வேள்வியையும் ஒருங்கே தன் உடலகத்துள் முறையறிந்து வளர்ப்பான். தாய் வயிற்றினுள் தங்கிப் பிறக்கின்ற கருவிற்கு அவளது குறிபோல எல்லாப் பயன்களது விளைவிற்கும் இன்றியமையாச் சாதனமாக உலகம் கண்டது வேள்வியே.Special Remark:
``அகங் கண்ட யோகி``, என்பதை முதலிற் கொண்டு உரைக்க. `பகத்தைச் சாதனமாகக் கண்டு கொண்ட கரு`` என்க. இவ்வாறு உவமை கூரியதனால். காய சித்தி முதலிய சிவ பயன்களுக்கு யோனி குண்டம் சிறந்ததாதல் பெறுதும்.இதனால், யோகிகள் வேள்வியை அகத்து ஓம்பியே பயன் பெறுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage