
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

எடுக்கின்ற பாதங்கள் மூன்ற(து) எழுத்தைக்
கடுத்த முகம் இரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணும் நாஏழு கொம்பொரு நாலு
அடுத்தெழு கையான தந்தமி லாற்கே.
English Meaning:
Form of Sacrificial GodThree His feet, Seven His hands,
Two His faces, six His eyes,
Seven His tongues, four His horns,
Thus does He rise from the Sacrificial Fire Pit
He the one that no end knows.
Tamil Meaning:
குண்டத்தில் தீயாய் விளங்கும் சிவனுக்கு, (சிவாக்கினிக்கு) நடக்கின்ற பாதங்கள் மூன்று; `ஐ` என்னும் எழுத்தின் வடிவை ஒத்த முகம் இரண்டு; அம்முகங்களில் உள்ள கண்கள் ஆறு; நாக்கு ஏழு; தலையிரண்டிலும் கொம்புகள் நான்கு; கை ஏழு; இவ்வாறு அமைந்துள்ளன.Special Remark:
`இவ்வாறு ஆகமங்களுட் சொல்லப் பட்டது` என்பதாம். மூன்றது - மூன்று என்னும் எண்ணினையுடையது. படித்து - ஒரு படித்தாக. ``அடுத்து`` என்றது, `மற்று` என்னும் பொருளது. ``ஆனது`` என்பதனை எல்லாவற்றோடும் கூட்டி, ஏற்ற பெற்றியால் முடிக்க. `எழுகண்ணானது` என்பது பாடம் ஆகாமை அறிக.இதனால், சிவாக்கினியது உருவம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage