
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
அடிஇரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏ ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.
English Meaning:
Sacrificial Fire Pervaded Macrocosm; Kundalini Fire pervaded MicrocosmThe Sacrificial Fire Pit spread
Unto Kundalini Fire across Chakras Six
And in two-petalled centre (Ajna) ended;
The sacred Fire engulfed worlds seven entire,
From top to bottom unintermittent,
Those who witnessed it,
Have indeed gained all riches vast.
Tamil Meaning:
மேற்கூறியவாறு நிற்கும் சிவாக்கினிக்கு இரு முக்கோணங்களை ஒன்றன்மேல் ஒன்றாய் இட்டது போல அமைக்கும் அறுகோண குண்டமே சிறந்தது. அதன் கண் சிவசோதியை அவியாத வாறு கண்டவர்க்குப் பெரிய செல்வம் உண்டாகும்.Special Remark:
``கொடி`` என்பதற்குப் பொருள் மேற்கூறப்பட்டது. `ஆறு பக்கம் சென்று குலாவிய குண்டம்` என்க. `இருகோணமாய் அடியும் அந்தமும் (மேலும்) ஒக்கும்` எனக் கூட்டுக. `ஆறு பக்கம்` எனவே, இரண்டும் முக்கோணமாதல் பெறப்பட்டது `கண்டவர்க்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மாதனம் - பெரிய செல்வம். இது அருட் செல்வத்தையும் குறிப்பதாம்.அறுகோணம் சிறந்த குண்டமாதல், சிவனது முகத்தோடும், குணத்தோடும் ஒத்து நிற்றலாலும், உடம்பினுள் ஆதாரங்களும் ஆறாத லாலும் என்க. இதனானே, இஃது ஆறுமுகனுக்கும் மிக ஏற்புடைய தாதல் அறியப்படும். இதன் பயனும் சிறப்பாகப் போகமாதல் கூறப் பட்டமை காண்க.
இதனால், அறுகோண குண்டத்தின் சிறப்பு வலியுறுத்தப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage