
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

நவகுண்ட மானவை நானுரை செய்யின்
நவகுண்டத் துள்எழும் நற்றீபந் தானும்
நவகுண்டத் துள்எழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்ட மானவை நானுரைப் பேனே.
English Meaning:
The Nine Sacrificial Pits are BlessedTo recount greatness of sacrificial pits nine is thus;
In sacrificial pits nine,
Will blaze the blessed fire;
In the sacrificial pits nine
Will arise all things great;
Thus shall I speak of sacrificial pits nine.
Tamil Meaning:
அழலோம்புதற்குரிய குண்டங்கள் ஒன்பது வகையின. அவற்றின் சிறப்பை நான் சொல்லுமிடத்து, சிவபெருமானது சிறந்த உருவமாகிய ஒளிப்பிழம்பு ஓங்கி விளங்குவது அக்குண்டங்களிலே தான். அதனால், அப்பெருமானை அம்முறையில் வழிபடும் வழி பாட்டினால் எல்லா நன்மைகளும் விளையும். அது பற்றி அவற்றின் முறையை நான் இங்குக் கூறுகின்றேன்.Special Remark:
``நல்தீபம்`` என்றது சிவனது ஒளி உருவத்தையாம். ``தானும்`` என்பதில் தான், அசை. உம்மை, சிறப்பு.இதனால், அதிகாரம் நுதலியது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage