
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

அந்தமி லானுக் ககலிடந் தானில்லை
அந்தமி லானை அளப்பவர் தாமில்லை
அந்தமி லானுக் கடுத்தசொல் தானில்லை
அந்தமி லானை அறிந்துகொள் பத்தே.
English Meaning:
But He is EndlessFor the Endless One, none the Space there is;
For the Endless One, none there to take measure;
For the Endless One, none the words adequate to describe;
Know the Endless One, O! ``Ya`` (Jiva)!
Tamil Meaning:
அழிவில்லாத சிவாக்கினியைத் தன்னுள் வியாப் பியமாகக் கொள்வதோர் இடமில்லை. (அவனே எல்லாவற்றிலும் வியா பகன்.) அவனுக்குத் தோற்றமும், முடிவுமாகிய கால எல்லையும் இல்லை. (என்றும் உள்ளவன்.) அவனது இயல்பை முற்றக் கூறச் சொல்லில்லை. ஆகவே, அவனைத் திருவைந்தெழுந்துள் யகர வாச்சியமாகிய ஆன்மாவினுள்ளே காண்பதே அறிவுடைமையாம்.Special Remark:
`சிவாக்கினியாவான் சிவனே` என்பதனை இவ்வாற்றால் உணர்த்தினார். `பத்தின் கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.இதனால், `சிவாக்கினியாவான் சிவனே` என்பது கூறி, அதன் சிறப்புணர்த்தப்பட்டது, இதனானே, சிவன் அவ்வக்கினியாய் யாண்டும் நின்று அருள்புரிதலும் பெறப்பட்டது படவே, ``பொங்கழல் உருவன்``1 என்ற திருஞானசம்பந்தர் திரு மொழி, - `அழல்போலும் உருவத்தை உடையவன்` என உவமத் தொகையாயும், `அழலை உருவாக உடையவன்` என இரண்டாம் வேற்றுமைத் தொகையாயும் நிற்றலேயன்றி, `அழலாகிய உருவத்தை உடையவன்` எனப் பண்புத்தொகையாயும் நின்று பொருள்படுதல் கொள்ளப்படும். உவமத் தொகையை நிறமும், வடிவும் பற்றிக் கொள்க. வடிவு இலிங்கத் திருமேனி.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage