
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.
English Meaning:
Kundalini Fire Blazes with Sacrificial FireFive His Faces
Five times Five the Tattvas He measures,
There is Sacrificial Fire Pit open,
That is of sides five;
And so it behooves,
For subtle Kundalini Fire to reach
The Lord that is in Divine Fire – Five-fold (Panchagni)
That verily is to attain Mukti.
Tamil Meaning:
ஐந்து முகங்களால் ஐந்து வேறுபட்ட நிலைகள் போலக் காணப்படுகின்ற சதாசிவரால் அளவிட்டறிந்து ஆளப்படும் மகேசுவரரது நிலைகள் இருபத்தைந்தும் புகை பொருந்திய ஓம குண்டத்தில் பொருத்தி விளங்குதலால், சதாசிவர் முதல் ஐவராக விரிந்து நிற்கின்ற சிவன் மகிழ்ந்து தோன்றுகின்ற ஓமாக்கினியை நல்ல வகையில் ஓம்பி வாழ்தலே முத்தி நிலையாகும்.Special Remark:
மஞ்சு - மேகம்; என்றது புகையை. `மஞ்சம்` என்பது கடைக் குறைந்து நின்றது. `சிவபிரான் அவ்வப்பொழுது அடியவர்க்கு அருளக் கொண்ட பழைய உருவத் திருமேனிகள் இருபத்தைந்து` என ஒரு வரம்பு செய்யப்பட்டுள்ளன. அவையாவன:- 1. விக்கினப் பிரசாதர், (விநாயகரை அளித்தவர் - கஜமுகானுக்கிரகர்) 2. பிரமசிரச் சேதர், (நகமுக நிக்கிரகர்) 3. பிட்சாடனர், 4. வீரபத்திரர், 5.கஜசம்மாரர், (யானையுரித்த பெருமான்) 6. சிராதர், (வேடர் -அருச்சுனனுக்கு அருள்புரிந்தவர்) 7. காளகண்டர், (விஷாப ஹரணர் - நஞ்சுண்ட பெருமான்) 8. கங்காளர், (கங்காளம் - பரம விட்டுணுக் களது எலும்புக்கூடு) 9. சக்கரப் பிரதானர், (திருமாலுக்குச் சக்கரம் அருளியவர்) 10. சண்டேசானுக்கிரகர், 11. சுகாசனர், (யோக மூர்த்தி) 12. ஏகபாதர், (உலகைத் தோற்றுவித்தவர்) 13. நடராஜர், 14. சலந்தராரி (சலந்தரனை அழித்தவர்) 15. திரிபுராரி, (திரிபுரத்தை எரித்தவர்.) 16. காலாரி, (காலனை உதைத்தவர்) 17. காமாரி, (மன்மதனை எரித்தவர்) 18. இலிங்கோற்பவர், 19. சந்திரசேகரர், (பிறைமுடிப் பெருமான்) 20. சோமாஸ்கந்தர், 21. இடபாரூடர், 22. உமாமகேசர், 23. கல்யாணசுந்தரர், 24. அர்த்தநாரீசுரர், 25. அரியர்த்தர் (திருமாலை இடப்பாதியில் உடையவர்)என்னும் மூர்த்தங்களாம்.இவை சிறிது மாறுபடவும் கூறப்படும். அவ்விடத்தில் தட்சிணாமூர்த்தி, யக்ஞேஸ்வரர், உக்கிரர், கங்காதரர், ஆபற்சகாயர், மச்ச கூர்மவராக நரசிங்க சங்காரர்கள், அந்தகாரி (அந்தகாசுரனை அழித்தவர்) என்னும் மூர்த்தங்கள் சொல்லப் படும். வீரபத்திரரையும், பைரவரையும் மாகேசுர மூர்த்தங்களுள் வையாது சிவகுமாரர்களாகக் கொள்ளுதலே மரபு.-
ப்ரதமம் ஸோம தாரீச த்விதீய முமயாசகம் I
த்ருதீயம்து வ்ருஷாரூடம் சதுர்த்தம் ந்ருத்தரூபகம் II
வைவாஹை்யம்பஞ்சமம் வித்யாது ஷஷ்டம்பிக்ஷாடனம்பவேது I
காமாரிம் ஸப்தமம் வித்யாது காலகால மதாஷ்டமம் II
நவமம் த்ரிபுராரிஸ்யாது ஜலந்தர வதோதச I
ஏகாதசம் தஜாரிஸ்யாது த்வாதசம் வீரபத்ரகம் II
த்ரயோதசம் ஹரேரர்த்தம் அர்த்தநாரீ சதுர்தசம் I
பஞ்சாதசம் கிராதம்ஸ்யாது கங்காளம் ஷோடசம்பவேது II
சண்டேசானுக்கிரஹம்சைவ ததஸ்ஸப்த தசோபவேது I
விஷாபஹரணஞ்சைவ த்வஷ்டாதச மிதிஸ்ம்ருதம் II
சக்ரதானஸ்வரூபந்து ஏகோநவிம்சமீரிதம் I
விக்னப்ரஸாதம் விம்சஸ்யாது ஸோமாஸ்கந்தமத:பரம் II
த்வாவிம்ஸதேக பாதந்து த்ரயோவிம்சத்ஸுகாஸநம் I
தக்ஷிணாமூர்த்திரூபந்து சதுர்விம்சத்ப்ரகீர்த்திதம் II
லிங்கோத்பவஸ்வரூபந்து பஞ்சவிம்சத்ப்ரகீர்த்திதம் I
ஏதந்மஹேசரூபாணாம் மூர்த்தி பேதா: ப்ரகீர்த்திதா: II
இதனால்,`ஓமாக்கினியே அனைத்துச் சிவமூர்த்திகளாயும் நிற்கும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage