
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திர நல்லிருப் பத்தஞ்சே.
English Meaning:
Form of Siva-Sakti in Sacrificial FireThere, Siva with His consort Parvati appears,
Four the spreading hands,
Five the legs,
Ten the faces,
Two the flowery feet
Forty the shining crowns, and
Twenty-five the ears.
Tamil Meaning:
மேற் கூறிய கமலாசனத்தில் எழுந்தருளியிருப்பவ ராகிய, மனோன்மனி மணாளராகிய சதாசிவ மூர்த்திக்கு முகம் ஐந்தாக லின், உச்சி முகம் நீங்க ஏனைய நாற்றிசையில் உள்ள நான்கு முகங் கட்கும் முகம் ஒன்றிற்கு நான்காகக் கைகள் இருபதும், எல்லா முகங் கட்குமாக வாய் ஐந்தும், கண்கள் ஐம்மூன்று பதினைந்தும், காதுகள் பத்துமாய் உள்ளன.Special Remark:
`கால் பத்துப் பத்து (இருபதில் காற்பங்கு) முகம்` எனவும், `கால் பதி - காற்பங்கு குறைந்த - பத்துப் பத்து (இருபது) கண்கள்` எனவும் கொள்க. பூப்பதி பாதம் - கமலாசனத்தில் பொருந்தி யுள்ள திருவடி` `நாற்பத்து` என்பது முதல் நீண்டது, `இருப்பு` என்னும் குற்றுகர ஈற்றுச் சொல், அத்துச் சாரியை பெற்றது. `சுடர் முடி பத்துச் சோத்திரம் இருப்பத்து அஞ்ே\\\\u2970?` என இயைந்து நிற்கும். இதனை, முதற் கண் எடுத்துக் கொண்டு உரைக்க. இங்ஙனங் கூறவே, மேல், ``எடுக் கின்ற பாதங்கள்`` என்னும் மந்திரத்துட் கூறியாங்குச் சிவாக்கினியை வேறு வடிவில் தியானித்தலே யன்றிச் சதாசிவ மூர்த்தியாகவே தியானித்தலும் முறை என்பது பெறப்பட்டது. இஃது இன எதுகை.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage