
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதனமாகச் சமைந்த குருஎன்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.
English Meaning:
Hold Sacrificial Fire As GuruThe Fire that blazeth as riches vast
Hold it as Guru Great to reach your goal,
When that Jnana dawns,
The regal powers over world
In earnest seek Jiva.
Tamil Meaning:
தன்னைக் காண்பவர்க்குப் பெரிய செல்வமாய் வளர்கின்ற ஓமத்தீயைத் தனக்குப் பயன் தரும் சாதனமாகக் கொண்ட ஆசாரியன், எப்பொழுதும் மாணவர்களது சத்திநிபாத வகையைத் தெரிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு அதனை அறிவித்தலை மேற் கொள்வானாயின், அவன் உலகம் முழுதிற்கும் குருவாய்ப் பலரை ஆட்கொள்ள வல்லவனாவன்.Special Remark:
மூன்றாம் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. `போதனம், பாதனம்` என்பன, `போதித்தல், வீழ்தல்` எனத் தொழிற் பெயராய் நின்றன. நான்காம் அடியில், `ஆக` `உண்டாக` என்னும் பொருட்டு.இதனால், அழலோம்பல் ஆசாரியர்கட்குச் சிறப்புக் கடனாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage