
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

சேர்ந்த கலைகளும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.
English Meaning:
Unite in Him Through Kundalini FireIn that Fire Pit within
The Five Kalas of Siva art;
The ten directions cardinal there art;
The Five elements too art there;
Those who warmed themselves at Fire of Kundalini
Have verily united in God.
Tamil Meaning:
எல்லாவற்றையும் வியாபித்து நிற்கின்ற நிவிர்த்தி யாதி பஞ்சகலைகளும், ஓமத் தீயும் ஒன்றாய் இயைந்து நிற்கும், அதனால், எல்லா உலகங்களும் அத்தீயினிடத்து அடங்கி நிற்பன வாம். ஆகையால், அந்தத் தீயை நிவிர்த்திக்குமேல் பிரதிட்டையில் சிறிது எல்லையளவிலே நிற்கின்ற ஐம்பூதங்களின் ஒன்றாகிய தீயாக எண்ணும் எண்ணத்தை வெறுத்தவரே மேற் சொல்லியவாறு சிவ னோடு என்றும் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையைப் பெற்றவராவர்.Special Remark:
வேள்வித் தீயைப் பூதாக்கினியாக நினைப்பவர் வைதி கரும், அந்நினைப்பை விடுத்துச் சிவாக்கினியாக நினைப்பவர் சைவரும் ஆவர் என்க. `கலை அஞ்சும் இக்குண்டமும் சேரும் எனக் கூட்டுக. இதனுள்ளும் ஈரடி எதுகைவந்தது.இதனால், `வீடுபயக்கும் வேள்வி சிவவேள்வியே` என்பது உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage