
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.
English Meaning:
Sacrificial Fire Outside Kindles Kundalini Fire InsideDecagonal, octagonal, hexagonal and square
Thus are sacrificial pits shaped,
In them blazes fire
Like a crimson lotus;
Centre your thoughts,
The Fire within (Kundalini) pervades the body entire
As unto Siva-Sakti its tonques lapped.
Tamil Meaning:
பத்தும், எட்டும், ஆறும், நான்குமாகிய கோணங்களால் வரையறுக்கப்பட்ட குண்டமாகிய பொய்கையில் வளர்ந்து மலர்கின்ற தீயாகிய தாமரை மலரில் அடங்கிக் கலந்து நிற்கின்ற முப்பத்தாறு தத்துவங்களும், அவற்றின் காரியமாகிய உடம்பும் சத்தியிடமே அடங்கிநிற்பனவாம்.Special Remark:
நவ குண்டங்களுள் சிறப்புடையவற்றை எடுத்துக் கூறியவாறு. தீயைத் தாமரையாக உருவகித்தது, அகத்தும், புறத்தும் தத்துவங்களைச் சிவனுக்குக் கமலாசனமாகக் கற்பிக்கும் முறையோடு மாட்டேற்றுதற்கு. ஆசனமாய் அடங்கும் தத்துவங்கள் யாவும் மூர்த்தியாகிய சத்திக்குக் கீழே அடங்கிவிடுதல் பற்றி, ``மெய்யும், ஆகமும் பார்ப்பதிபாலே பட்டிட்டுநின்றது`` என்றார். மெய் - தத்துவம்; இதனிடத்து எண்ணும்மை தொகுத்தல் பெற்றது. இதனுள்ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.இதனால், மேல் (1012) ``ஆறாறும் கொண்ட இத்தத்துவம்`` எனக் குறிக்கப்பட்ட தத்துவங்கள் அகத்தொளி, புறத்தொளிகளில் கலந்து நிற்கச் செய்யுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage