
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
பதிகங்கள்

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும்
கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.
English Meaning:
He Resolved My ContradictionsMy contradictions He resolved;
Disease, age and life`s reckoning He ended;
Thus He accepted me in His service,
He my Nandi;
My contradictions resolved,
My life`s sorrows, I laid low;
And Siva, of Himself appeared.
Tamil Meaning:
எங்கள் நந்தி பெருமான் என்னுடைய அறியாமையைப் போக்கினார். ஆகவே, என் உடம்பு நோய் உறு தலையும், முதுமை எய்தித் தளர்வுறுதலையும் போக்கி `அவை வரும் என்று எண்ணும் எண்ணங்களையும், அஃதாவது கவலையையும் போக்கி, என்னைத் தமக்கு ஆளாகக் கொண்டவராயினார். யானும் தொன்று தொட்டு என்னோடு கூடவே தொடர்ந்து வந்து கொண்டிருந்த வெறுப்பு விருப்புக்களைப் போக்கி, அவரையே சிவமாகக் கண்டு வழிபட்டேன். அதனால் சிவமே என்முன் வந்து நின்றது.Special Remark:
``நந்தி`` என்பதை முதலிற் கொள்க. ``பிணக்கறுத் தான்`` என்பதன்பின் `அதனால்` என்பது வருவிக்க கணக்கு - எண்; எண்ணம். காண், முன்னிலையசை, `என்னை ஆண்டனன்` என முன்னே கூட்டி முடிக்க. ``முன்`` என்பது `முற்றொட்டு` எனப்பொருள் தந்தது. ``துன்பம்`` என்றதனால், `இன்பம்` என்பதும் கொள்ளப்பட்டு, `என்னும்` என ஒரு சொல் வருவித்து, `துன்பம் இன்பம் என்னும் பிணக்கு` என உரைக்கப் பட்டது. `வணங்கல்` என்பது எதுகை நோக்கி வலிந்து நின்றது. தான், அசை, `தானே வந்தது` என்றலும் ஆம்,இதனால், குருவருளாலே சிவப்பேறு முறையானே வந்து வாய்த்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage