
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
பதிகங்கள்

ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.
English Meaning:
They Become GodEnded the birth; sundered the bonds;
God and I one became;
No more for me the way of rebirth;
I have met Siva the Auspicious.
Tamil Meaning:
நல்லதொரு வளமான சார்பாய் உள்ள சீவனை நான் சார்ந்துவிட்டேன். அதனால், முன்பு எனக்குச் சார்பு போலத் தோன்றி என்னைப் பிறவிக் கடலிலே அலைய வைத்த பாசங்களினின்றும் நீங்கிவிட்டேன். இப்பொழுது நான் அப்பாசங்கட்கு மேலே போய்விட்டேன். `பரம்பொருள் வேறு நான்வேறு` என்பதன்றி, `ஒன்றே` எனப்படும் நிலையை `எய்தினேன்? ஆகவே, இறப்பதும், பின் பிறப்பதும் இனி எனக்குத் தவிர்க்க முடியாத சூழல் இல்லை.Special Remark:
ஈற்றடியை முதற்கண் கூட்டி உரைக்க. ``கழிந்தேன்`` என்பது அவற்றின் நீங்கி உயர்ந்தேன்` எனப் பொருள் தந்தது. `ஒன்று ஆனேன`` என்பது `ஒன்று எனச் சொல்லப்படும் நிலையினன் ஆயினேன்` என்றபடி.ஆக்கம் - பிறப்பு. தம் குறிப்பின்றியும் வருவனவற்றைக் குறிப்பொடு கூடி வருவன போல, ``வேண்டேன்`` எனக் கூறியது இலக்கணை வழக்கு.
இதனால், மோன சமாதியை அடைந்தவர்கக்கு ஏனை யோர்க்கு உளவாகும் துன்பங்களுள் யாதும் இல்லாமை கூறப்பட்டது. ``இன்பமே எந்த நாளும்; துன்பம் இல்லை;3 என அருளிச் செய்ததையும் நோக்குக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage