
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
பதிகங்கள்

நமன்வருன் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான்எதி ராமே.
English Meaning:
Their Thought PowerIf God of Death comes,
I shall smite him with Sword of Jnana,
If Siva comes,
I am sure to go with Him;
Long back had I sundered Karma,
Which to birth leads;
Who can stand against Thought,
Of intense devotion born?
Tamil Meaning:
ஞான நிட்டையில் நிற்கும் அறிவையுடையார்க்கு அவர்தம் உடல் நீங்கும் காலத்து அதனை நீங்கச் செய்து சிவனே முன் வந்தருளுவான். (ஏனையோர்க்கு யமதூதுவர் வந்து உடலை நீக்கி, உயிர்முன் நிற்றல்போல நில்லார்.) யான் தவத்தால் முன்பே பிறப்பிற்குக் காரணமான வினைகளை யெல்லாம் அருத்தொழித்துச் சிவனை மறவாமையாகிய நிட்டையில் நின்றேன். (ஆகவே, யம தூதுவர் என் முன்வாரார்.) `வந்தாலும், சிவனை உணரும் உணர் வாகிய வாளால் அவர்களை எறிய இயலும்` என்னும் உறுதி யுடையேன். முற்கூறியவாறு சிவன் தான் என்முன் வருவான். வந்தால் அவனுடன் நான் மகிழ்ச்சியோடு செல்வது திண்ணம்.Special Remark:
ஈற்றடியை மூன்றாம் அடிக்கு முன்னர்க் கூட்டிப் பின் அவற்றை முதலில் வைத்து உரைக்க. `தானே எதிராம்` எனப் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. `எதிராரே` என்பது பாடமாயின், `தாம் எதிராரே` என வருதல் வேண்டும். `அதுவும் அவ்வாறு ஆம் `எனில், `நிட்டையுடையார்க்கு மாறாய் முன்னிற்பவர் இலர்; அதனால் அவர்முன் நமன் தூதர் செல்லார்` என உரைக்க. ``நமன் வரின்`` என்பதில் `வரின்` என்பது, `வருதல் இல்லை` என்பதையும், சிவன் வரின்`` என்பதில் `வரின்` என்பது, வருதல் உறுதி` என்பதையும் குறித்து நின்றன. ஞானம் வாளாதல் மேலேயும் சொல்லப்பட்டது. 9 ``சிவன்வரின் நான் உடன் போவது` என்பதில் வருதல் போதல்கள் இடையீடகல ஒன்றுதலைக் குறித்தது.பவம் - பிறப்பு. முகந்து வந்த பிராரத்த வினை முடிந்தால், எடுத்த உடம்பு வீழ்ந்துவிடும். அவ்வீழ்ச்சி, மேலும் வினை யுடையார்க்கு `இறப்பு` என்றும், வினையில்லாதார்க்கு `வீடு பேறு` என்றும் சொல்லப்படும். `இறவா நிலை` என்பது முதற்கண் கூறிய வகையில் உடம்பு நீங்காமையாம். ``நமனை அஞ்சோம்`` 3 என்ற அப்பர் திருமொழியும் காண்க. முதல் அடி உயிர் எதுகை பெற்றது.
இதனால் `மோன சமாதியடைந்தார்க்கு உடலை விழ்த்துவது திருவருளேயன்றி, வினைப் பயனை அடைவிக்கின்ற கூற்றுவன் அல்லன்` என்பது கூறப்பட்டது. இது பற்றியே, `ஞானிகளது` உடலை எரிப்படுத்தல் கூடாது` என ஏழாம் தந்திரத்தில் `சமாதிக் கிரியை` அதிகாரத்தில் சொல்லப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage