
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புறம்
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கும் மந்திரம் தாம்அறி யாரே.
English Meaning:
Nandi is WithinAbove the lotus of the heart, beyond
In Bliss abides,
Nandi of the spreading matted locks;
Yet they know not the mantra to muse and cnant
That will to Him lead and there abide. Lord is a Gem-Set Jewel
He is the gem that lies embedded in the cubit of the heart
Until they see Him, they think not of Him;
Into them who cherish and muse on Him over and over
As a gem-set Jewel He shines.
Tamil Meaning:
உடம்பில் கீழாக உள்ள மூலம் முதலிய ஆறும், அதற்குமேல் ஏழாவதாக உச்சியில் உள்ளதும் ஆக ஏழு உறுப்புக்களும் தாமலை மலர் வடிவின அவை, ``ஆதாரங்கள்`` எனப்படும். ஏழாம் தானத்திற்குமேல் பன்னிரண்டங்குல அளவு அருவமாய் நிற்றலால் அது `நிராதாரம்` எனப்படும். அந்த நிராதாரத்தையே, ``ஆவிக் கமலத்தின் அப்புறம்`` என்றார் இனி, அப்பன்னிரண்டங்குலத்திற்கு அப்பால் உள்ளது ``மீதானம்`` எனப்படும். `துவாதசாந்தம்` என்பதும் இதுவே. இதனையே, ``அப்புறத்தின் புறம்`` `மீதானமே பரமசிவனுக்கு இடமாவது` எனக் கூறப்படுதலால், அவ்விடத்தில், ``மேவித் திரியும் விரிசடை நந்தியை`` என்றார்.``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` 3
என்றது காண்க. கூவி - அழைத்து. ஆதாரங்களையும், நிராதாரங் களையும், அதற்கு மேலேயுள்ள மீதானத்துயம் கடந்து அப்பால் உள்ள பரமசிவனை அழைக்க வேண்டுதலால், அதன் பொருட்டடு மலர்களை இருகைகளையும் தாமரைப் போது வடிவமாகக் குவித்தலும், மலர்த்தலும் இன்றி இடைப்பட்ட வடிவமாக வைத்து அதனுட் கொண்டு, இருதயம் முதலாக மேலுள்ள ஆதாரங்களில் பிராசாத மந்திர உச்சாரணத்துடன் முறையே மீதானம் மட்டும் உயர்த்துவர். அதன்பின்பு அங்கு இருகைகளையும் மலர்த்தி அவற்றுள் பரமசிவன் அளவிடற்கரிய ஒளிவடிவாய் வந்ததாகக் கருதி, கைகளை உயர்த்திய முறையிலே மீள இறக்கிக் கொணர்ந்து சிவலிங்கத்தின் உச்சியில் அம் மலர்களைச் சொரிந்து முன்னமே சதாசிவ மூர்த்தமாகப் பாவித்து நிறுத்தப்பட்ட அம்மூர்த்தியின் இருதயத்தில் இருகைகளையும் கவிழ்த்து அமைக்கும் முறையால் இருக்கப் பண்ணுவர். அழைத்தல், அல்லது கொணர்தல் `ஆவாகனம்` எனவும், இருத்துதல் `தாபனம்` எனவும் சொல்லப் படும். அவற்றையே, ``கூவிக் கருதி`` எனவும் ``கொடுபோய்ச் சிவத்திடைத் தாபித்தல்`` எனவும் கூறினார்.
Special Remark:
``தாவிக்கும் மந்திரம் தாம் அறியார்`` என்றாரியினும், `மந்திரத்தால் தாவித்தலை அறியார்` என்றலே கருத்தென்க. ``கூவிக் கருதிக் கொடுபோய்த் தாவித்தலை அறியார்`` என்றதனால், `இவற்றுள் ஒன்றையும் அறியார்` என்தாயிற்று. இனி, `மந்திரத்தால் தாவித்தலை அறியார்` என்றதனால், `சிலர் சிவ பூசை செய்யினும் முறைப்படி ஆசிரியரை அணுகி அவர் அருளிச்செய்தபடி செய்தலை அறியார்` என்றதும் ஆயிற்று. ஆவி - உயிர். அஃது ஆகுபெயராய் அஃது இருக்கும் இடமாகிய உடம்பைக் குறித்தது. ``ஆவி`` குளமுமாம் ஆதலின், குளத்தின் கண் உள்ள தாமரை` என வேறொரு பொருளையும் தோற்றுவித்தது.இதனால், சிவபூசை செய்யத்தக்கது` என்பதும், `செய்யுங்கால் முறைப்படி செய்தலே சிறப்பு` என்பதும் கூறப்பட்டன.
இம்மந்திரத்தின் பின் சில பிரதிகளில் காணப்படுகின்ற ``சாணகத் துள்ளே`` என்னும் பாடல் சில பிரதிகளில் இல்லை. அது நாயனார் வாக்காகத் தெரியவில்லை.
சாணாகத் துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணு மளவும் கருத்தறிவா ரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.
அதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``பெருந்தன்மை நந்தி`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்கு உரியது.பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றோரே.
அதனை அடுத்துக் காணப்படும் ``சமைய மலசுத்தி`` என்பது ஐந்தாம் தந்திரத்தில் ``சரியை`` என்னும் அதிகாரத்தில் வந்தது.சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆமந் திரசுத்தி
சமையுநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானமா னார்க்கபி டேகமே.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage