
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

மறப்பதுற் றெவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொசு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி நின்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.
English Meaning:
My Prayer is to Worship Lord with ArchanaEven if in thoughtlessness
I world`s ways pursue,
Do grant me this;
That I with water and flower
Unceasing adore You;
This my prayer;
O! Lord of immortals!
Tamil Meaning:
தேவர்கட்கெல்லாம் தேவனாகிய சிவபெருமானே! யான் இப்பிறப்பினின்று நீங்கி எப்பிறப்பை அடைந்து எங்கேயிருந்து எதனை மறந்து போனாலும் திருத்தமான பூ, நீர் முதலியவற்றைக் கொண்டு உன்னைச் சிறப்புடன் பூசிக்கின்ற இந்த வழக்கத்தை மட்டும் மறவாமல் கடைப்பிடித்து நிற்கும் வரத்தை அடியேன் முற்றாகப் பெறும்படி அருள் செய்யவேண்டும்.Special Remark:
`அஃது ஒன்றே யான் உன்பால் வேண்டுவது` என்பது குறிப்பெச்சம். தம் அன்பு மீதூர்வால் இவ்விண்ணப்பத்தினை நாயனார் சிவபிரானிடம் செய்து நின்றைமையால், `சிவபூசை செய்வார் அப்பூசையில் இதனையே அவன்பால் வேண்டுக எனக் கூறி, அதனானே, சிவபூசையை மேற்கொண்டவர் அதனை ஒரு ஞான்றும் கைவிடுதல் கூடாது` என்பதனையும் உணர்த்தியவாறு. சொற்கிடக்கை முறை வேறாயினும் கருத்து நோக்கி இதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது. `நின்னை வழிபடும் வண்ணம் மறப்பின்மை பெறவேண்டும் என்க.\\\"புழுவாய்ப் பிறக்கீனும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\\\"l
என வேண்டினமையை நினைக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage