
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
English Meaning:
Soul is Siva LingaFor the Bounteous Lord
This heart is the sanctum holy,
The fleshy body is temple vast
The mouth is the tower gate;
To them that discern,
Jiva is Sivalinga;
The deceptive senses but the lights that illume.
Tamil Meaning:
ஞானம் முதிரப் பெற்றவர்க்கு இலிங்க பூசை செய்தற்கு அவர்களது இருதயமே அவ்விலிங்கம் எழுந்தருளியிருக்கும் கரு வறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே அவ்விலிங்கத்தின் நேர் நோக்கு வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்.Special Remark:
எனவே, `அவர்க்கு இங்குக் கூறிய கருவறை முதலியன வேறு வேண்டா` என்பதாம் இங்ஙனமாகவே அவர் எஞ்ஞான்றும் இவற்றால் பூசை செய்து கொண்டேயிருப்பர் என்பதாம். வேறு கருவறை முதலியன புறத்தே நேரினும் அவற்றை அவர் இவ்வாறு பாவித்தே வழிபடுவர் என்பது உணர்க. \\\"தெள்ளத் தெளிந்தார்க்கு\\\" என்றதனால் இவ்வியல்பு ஞானியர்க்கு என்பது வெளிப்படை. பிறரெல்லாம் புறத்துக் காணப்படும் கருவறை முதலியவற்றையே அகத்தில் கற்பித்துக் கொண்டு வழிபட்டுப் பின்பு புறத்தே வழிபடுவர் என்க. அகத்தும், புறத்தும் ஞானியர் செய்யும் சிவபூசை `ஞான பூை\\\\u2970?` என்றும், ஏனையோர் செய்யும் சிவபூசை `கிரியா பூை\\\\u2970?` என்றும் சொல்லப்படும்.\\\"ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன்உனை நானலேன்\\\" *
என்று அருளிச் செய்து இக்கருத்துப் பற்றியேயாகும்.
\\\"வள்ளற் பிரானார்க்கு\\\" என்றது `வள்ளற் பிரானாரைப் பூசித்தற்கு` என்றபடி. \\\"புலன்\\\" என்றது புலன் உணர்வை, அஃது இயல் பிலே மயக்கத்தைச் செய்வதாதல் பற்றி, \\\"கள்ளப் புலன்\\\" எனவும், `அஃது அங்ஙனமாயினும் ஞானியர்க்கு அது தெளிவையே தருவ தாகும்` என்றற்கு, \\\"காளா மணிவிளக்கே\\\" என்றும் கூறினார். `கலா` என்பது `களா` என்றாகிப் பின், \\\"காளா\\\" என நீண்டது. கலா - கதிர்.
இதனால், சிவபூசையின் ஞானப் பகுதியின் இயல்பு கூறப்பட்டது. இனி அடுத்து வருகின்ற மந்திரமும் இதனையே கூறும். சிறப்புப் பற்றி இதுவே முன்னர்க் கூறப்படுகின்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage