
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் போற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின் றேத்திப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.
English Meaning:
Celestials Pray and Receive Lord`s GraceBearing choicest flowers and water
The heavenly Beings over clouds traverse;
And with Pasa subdued, stand and pray
And unfailing My Lord`s Grace receive.
Tamil Meaning:
`தேவர்` என்பார் யாவரும் ஒவ்வொரு பொருட்கு அதன் எல்லையளவும் உரிமை பூண்டு நிற்பவரே. அவ்வுரிமையை அவரெல்லாம் நல்ல இடத்திலிருந் எடுக்கப்பட்ட பூவையும், அவ்வாறே நல்ல இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரையும் கையில் ஏந்திக் கொண்டு நீரை முகந்து வரும் கரிய மேகங்கள் போல ஓரோர் தலத்தில் சென்று மிக்க அன்புடன் சிவபெருமானைப் பூசித்து அவன் பெரிதும் அருள் செய்யவே பெற்றனர்.Special Remark:
`அதனால் நற்பேறுகள் யாவும் சிவபூசையின் வழிப்பெறும் பயனேயாம் என்றபடி, `முன் செய் பூசா பலம்` என்னும் வழக்கினை நினைக.``வண்டுளரும் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும்,
புண்உரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும்,
அண்டர்தொழ வாழ்உன் இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்`` *
எனவும் ஆன்றோர் அருளினமை அறிக. இன்னும்,
``உலகா ளுறுவீர், தொழுமின்; விண் ஆள்வீர், பணிமின்; நித்தம்
பலகா முறுவீர், நினைமின்; பரமனோ டொன்ற லுற்றீர்,
நல்காமலரால் அருச்சிமின்; நாள் நரகத்து நிற்கும்
அல காமுறுவீர், அரனடி யரை அலைமின்களே`` 3
என்றற்றொடக்கத்தனவும் காணத் தக்கன. `பிழைப் பின்றிப் பெற்ற பேரருள்` என்க. அருளால் பெற்றவற்றை ``அருள்`` என்றே உபசரித்துக் கூறினார்.
இதனால், `சிவபூசையே யாவராலும் செயற்பாலது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage