
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

வெள்ளக் கடல்உள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு ஓர்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.
English Meaning:
Enter the Sea of Heart`s FaithIn the expanse of waters (Ganga)
With spreading matted locks is Nandi;
Renounce the sea of unbelief;
Enter the sea of heart`s faith;
They who adore Him not thus
With hands laden with flowers
Will in the sea of sorrow fall,
And forever immersed be.
Tamil Meaning:
உள்ளே ஓட்டத்தையுடைய கடலாகிய கங்கை விரியப்பெறுகின்ற சடைமுடியை உடைய சிவபெருமான் பொருட்டு உள்ளத்திலே நிறைவதாகிய அன்பு என்னும் கடலுள் மூழ்கிப் பூவை நிறையப் பறித்துச் சுமந்துகொண்டு போய் போலியாகிய நற் குணங்களை ஒழித்து உண்மை நற்குணங்களை உடையவராய் வழிபட நினையாதவர்கள் துன்பமாகிய கடலுள் மூழ்குகின்றனர்.Special Remark:
இதனை மேற்காட்டிய `கால் நகம் தேயத் திரிந்திரப் போர்`` என்றது திருமொழிகளில் அறிக. ``வெள்ளம்`` பெருக்கெடுத்து ஓடுதலைக் குறித்தது கடலுக்கு ஓட்டம் இன்மையால் ஓடுகின்ற கடல் கங்கா நதியாயிற்று. நீர்க்கடல் புறத்தே உளதாகலின், உள்ளக் கடல்`` என்றது பேரன்பினையாயிற்று. ``ஓர்சுமை`` என்றது மிகுதியைக் குறித்தது. கள்ளம் - பொய்மை. `கள்ளக் கடல், அள்ளற் கடல்` என்பன உருவகங்கள், `அல்லல்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. இனி, ``அள்ளல், ஒருவகை நாகம்`` என்றலும் ஆம்.மேல் சிவபூசை செய்தார் எய்தும் பயன்களைக் கூறியதனால், இதனால் அது செய்யாதார் எய்தும் துன்பங்களைக் கூறியவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage