
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

ஆரா தனையும் அமரர் குழாங்களும்
நீரார் கடலுள் நிலத்துள வாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமே
ஆராய் வுழியெங்கள் ஆதிப் பிரானே.
English Meaning:
Chant the Thousand Names of LordThe Immortals swarm in hordes seeking Him;
The seas and lands unending,
All that yours shall be,
When you chant unceasing
The thousand names of the Primal Lord,
And the One Sacred name Special.
Tamil Meaning:
தெய்வ வழிபாடுகளும், வழிபடப்படும் தேவர் கூட்டங்களும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த நிலத்தில் எங்கும் அளவின்றி உள்ளன. உண்மையாக ஆராய்ந்தால், அவ்வழிபாடுகளில் வேறு வேறாகச் சொல்லப்படுகின்ற அளவற்ற பெயர்களும் சிவன் பெயர்களே என்பதும், `அனைத்துத் தெய்வங்களும் சிவனே` என்பதும் விளங்கும்.Special Remark:
`அதனால், சிவனையே நேராகப் பெரியோர் வழிபடுவர்` என்பதாம்.\\\\\\\"காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம்; அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செயல்\\\\\\\"
எனவும்,
\\\\\\\"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்;மற் றத்தெய்வங்கள்
வேதனைப் படும்; பிறக்கும்; இறக்கும்; மேல் வினையும் செய்யும்;
ஆதலால் அவையிலாதான் அறிந்தருள் செய்வனன்றே\\\\\\\"
எனவும்,
\\\\\\\"இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து
அங்குவான் தருவர்? அன்றேல், அத்தெய்வம் அத்தனைக்காண்\\\\\\\" 8
எனவும் விளக்குதல் காண்க. (தெய்வப் பெயராய் வரும்) \\\\\\\"எல்லாப் பெயரும் பரமசிவன் பெயர் என்பதே வேதநூல் துணிபு என்பது ஆண்டுக் (சுவேதாச் சுவத உபநிடதத்தில்) காண்க\\\\\\\" என்னும் சிவஞான மாபாடியமும் 3 இங்கு நினைக்கத் தக்கது.
இவ்வாறெல்லாம் கூறுதல், `சிவபிரான் தவிர ஏனைத்தேவர் பலரும் பசு வருக்கத்தினரே` என்பதும், `சிவபிரான் ஒருவனே பதி` என்பதும் விளங்குதற் பொருட்டாம். ஆகவே, `பசு வருக்கத்தினரைப் பதியாகக் கருதிச் செய்தும் வழிபாடுகள் யாவும் நல்வினைகளாய்ப் பிறவியைத் தருதல் அன்றிப் பிறவியை நீக்கமாட்டா` எனவும், `சிவபிரானைப் பதியாக உணர்ந்து செய்யும் வழிபாடே தவமாய் ஞானத்தைப் பயந்து, அது வழியாக வீட்டைத் தரும்` எனவும் உணர்ந்து கொள்க. இம்மந்திரத்தல் பலவிடத்துப் பாடங்கள் திரிபெய்தன.
இதனால் சிவ பூசையின் தனிச் சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage